அன்பு மழை
Posted On Monday, June 23, 2008 at at 1:47 PM by மங்களூர் சிவா
அன்பை பொழிந்தாள்
மழையாய்
மனதை மாற்றினாள்
சிறுபறவையாய்
மிதக்க செய்தாள்
புவியிருந்து
அரையடி
மேலாய்

கண்கள் சொருகும்
ஆல்கஹால் மயக்கம்
அவளின்
சிறு சிரிப்பினில்

மனதின்
அருகினில் வந்தாள்
மயில்போல் நின்றாள்
விழி வீச்சினில்
கொன்றுவிட்டாள்
த்ரிஷா படம் உதவி : தியாகராஜன் , மங்களூர்