சிவாஜி வாயிலே ஜில்ல்ல்லேப்பி

பதிவுகளில் தொடர் விளையாட்டை யாரு முதலில் ஆரம்பிச்சதுன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். அவங்களுக்கு நிறைய மரியாதைகள் செய்யத்தான் கேக்குறேன்.

சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம்...........!!!
இது யாருன்னு அப்புறமா சொல்லுறேன்.

ஏதோ ஒரு ஆர்வ கோளாறுல ப்ளாக் ஆரம்பிச்சேனே தவிர என்ன எழுதுறதுன்னு தெரியாம முழி பிதுங்கி ஜனகராஜ் கணக்கா நிக்கிறேன். இதுல என்னடானா சிவாஜி வாயில ஜிலேபி ன்னு தொடர் பதிவுல எழுத தமிழ் பிரியன் கூப்பிட்டு இருக்கார். ஜி டாக்ல கூப்பிட்டு திட்டலாம்னு பார்த்தா தல(என்ன கொடும இது நான் அவருக்கு தலயாம்) உங்கள விட்டா எனக்கு யாரையுமே தெரியாது(நம்பிட்டோம் நம்பிட்டோம்). நீங்க எதையாவது எழுதுங்கன்னு சொல்லுறார்.

தலை கீழ நின்னு கூட யோசிச்சி பார்த்தேன். ஒண்ணுமே புரியல. சரி இந்த விளையாட்டை ஆரம்பிச்சி வச்ச ஜீவ்ஸ் கிட்டயே ஐடியா கேக்கலாம்னு போன் பண்ணினேன். என்மேல எவ்ளோ நாள் கோவம்னு தெரியல நான் மங்களூர் சிவா பேசுறேன்னு சொன்னவுடனே நீ எப்ப ஊருக்கு வருவ சொல்லு உனக்கு அப்ப வைக்கிறேன் ஆப்புன்னு காச் மூச்ன்னு கத்த ஆரம்பிச்சிட்டார்.

ஒருவழியா அவர கூல் பண்ணி(அவர் கேமராவுக்கு நல்ல லென்சு வாங்கி தர்றேன்னு சொல்லித்தான்) 'சிவாஜி வாயில ஜிலேபி' பத்தி ஒரு மொக்க பதிவு போடலாம்னு இருக்கேன். மொக்கைன்னா என்னன்னே தெரியல. அது என்னன்னு மட்டும் சொல்லுங்கன்னு கேட்டேன். யோவ் யாருகிட்ட வந்து என்ன கேக்குற. நானெல்லாம் பின்நவீனத்துவவாதியா மாறிட்டேன்னார். சரி அந்த கருமமும் தான் என்னன்னே தெரியல. அதையாவது சொல்லுங்கன்னு கெஞ்சி கேட்டேன். அவரு சொன்னத நீங்களே படிங்க. .

"அகராதியில் இருக்கும் புது வார்த்தைகளைத்தேடியெடுத்து, ஒருவரியில் சொல்லக் கூடியதை ஒரு பத்தியாகச் சொல்லி, சொல்லுவதைப் புரிந்தும் புரியாதவகையில் இருத்தி, சிலநேரம் படிப்பவர் முகம் சுளித்தாலும் பரவாயில்லை என்று எழுதி எழுதி முடித்தவுடன் ஆஹா நாம் எழுதியது நமக்கே புரிந்தும் புரியாமல் இருக்கிறதே என்ற எண்ணம் எழுந்தால் அது பின்நவீனத்துவம்என்று சொல்லப்படுகிறது"

ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சி. சரி ஒரு எக்ஸ்சாம்பிள் சொல்லுங்கன்னு கேட்டேன். அதுக்கு அவரு "ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கருப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது".......ன்னு என்னென்னவோ சொல்லிகிட்டே இருந்தார்.

எனக்கு ஒரு மண்ணுமே புரியல. இதெல்லாம் உங்க சொந்த சரக்கு தானான்னு தேவை இல்லாம ஒரு கேள்விய கேட்டுட்டேன். அதுக்கு சொன்னார் பாருங்க...."சொந்தமென்று சொல்லிட நினைக்கையில் தூரத்தினின்று தார்க்குச்சியால் குத்தப்பட்டு இரணத்தின் வலியால் தன் முதலாளியைக் குத்திக் குதறநினைக்கும் மனோபவத்தினைக் கொண்டதோர் முரட்டுக் காளையின் சாயலில் ஒருவன் எதிர் நின்றென்னை முறைக்கிறான்"....ன்னு சொன்னார்.என்ன கொடுமைங்க இது?

என்னோட போதாத நேரம் உங்ககிட்ட மாட்டிகிட்டேன். போதும் இதோட விட்டுடுங்கன்னேன். சரி சரி நீ பதிவு போட தானே இவ்ளோ நேரம் என்கிட்டே பேசினேன்னு கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. என்னத்த சொல்லுறது?

சரி பதிவோட ஆரம்ப வரிக்கு பதில் நான் தான்னு சொல்லிவேற தெரியனுமாக்கும். பதிவை தொடர நான் சில பேர அழைக்கனுமே!
அந்த கொடுமைய நான் செய்ய விரும்பலை :(