உனக்கென நான் எனக்கென நீ
Posted On Monday, September 29, 2008 at at 4:21 PM by மங்களூர் சிவாபோன வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை என நினைக்கிறேன் மனைவியிடம் ஆபீஸ் போய் வந்ததும் சரோஜா படம்போய் பார்க்கலாம் என சொல்லியிருந்தேன் வழக்கமாக எல்லா தங்கமணிகளையும் போலவே இல்லைங்க இன்னைக்கு வேண்டாம் என்றுவிட்டார். வியாழக்கிழமையும் எதேதோ காரணத்தினால் பார்க்க முடியாமல் போய்விட்டது.
ஒருவழியாக வெள்ளிக்கிழமை பார்த்தே தீருவது என தியேட்டருக்கு போனால் இருபது அடி தூரத்திலேயே போஸ்டரில் டாக்டர் போல இருந்தது அடடா சரோஜா படத்துல நம்ம டாக்டர் குருவி எங்கிருந்தய்யா வந்தார் என பக்கத்தில் போய் பார்த்ததும் தெரிந்தது சரோஜா படத்தை தூக்கீட்டு பந்தயம் போட்டிருந்தார்கள் :(
டாக்டர் படம் பார்க்கும் மனதிடம் இருவருக்கும் இல்லாததால் தியேட்டர் வாசலுடன் திரும்பிவிட்டோம்.
சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் அப்படினு ஒரு நிகழ்சி முன்னெல்லாம் வந்திட்டு இருந்தது இப்பல்லாம் வருதான்னு தெரியலை அதுல திருமணமான ஜோடிகளை பேட்டி எடுத்து விஜயசாரதி அவங்க விரும்பும் பாடல்களை கேட்டு போடுவார். அடடா அப்படி எதாவது ஒரு சந்தர்பம் நமக்கும் வந்து திருமணமாகி பாத்த முதல் படம் எதுன்னு கேட்டா சொல்றதுக்கு எதுவும் இன்னும் பாக்கலையேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். இன்னைக்கு வாக்கிங் போனப்ப 'காதலில் விழுந்தேன்' பட போஸ்டர் மாட்டிச்சு. ஆஹா எப்பிடியும் இந்த படத்தை இன்னைக்கு பாத்துடணும்னு வீட்டுக்கு வந்து அம்மிணிகிட்ட இன்னும் ஒன் அவர்ல வெளில போறோம்னு கிளம்புன்னு மட்டும் சொல்லி வெச்சேன் சினிமாக்குன்னு சொன்னா திரும்ப இன்னைக்கு வேணாம்னு அவ ஆரம்பிச்சா இந்த படமும் மிஸ் பண்ணிடகூடாதில்ல அதுக்காகத்தான். நாமல்லாம் யாரு.........
சன் குருப் எல்லா சானல்லயும் 10 நிமிசத்துக்கு ஒருதரம் 'சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்' அப்படின்னு விளம்பரம் போடறப்பவே உசார் ஆகியிருக்கணும் என்ன செய்ய விதி வலியது.
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
* * *
தோழியா என் காதலியா
சொல்லடி என் கண்ணே
ரெண்டு மூனு மாசமா கேட்டுகிட்டிருக்கிற இந்த இரண்டு பாட்டும்தான் இந்த படத்தை பார்க்க தூண்டிச்சு. படத்தைவிட்டு வெளில வர்றப்ப கழுத்து கண்ணு மூக்கு வாய் எல்லாத்துலயும் ரத்தம் ரெண்டு பேருக்கும் அப்பிடி ஒரு மரணகடி நேத்து யாரோ ஒரு புண்ணியவான் பதிவெழுதியிருந்தார் படம் நல்லாயிருக்குன்னு வேற :(
படத்தோட சுருக்கம் என்னன்னா ஈரோயின் துப்பட்டா பறந்து ஈரோ முகத்துல விழ ஆக்ஸிடெண்ட் ஆகீடுது அம்மிணி ஈரோவ ஆஸ்பத்திரில சேத்து கவனிக்கிற கவனிப்புல லவ்ஸ் ஆகீடுது. அப்புறம் அண்ணன் ஈரோயின் காலேஜ் பஸ்ல டெய்லி ஃபாலோ பண்ணறார் முத்தம் கேக்குறார் ஊட்டில நடக்குற மேச்ல ஜெயிச்சிட்டு வந்தாதான் அப்பிடின்னு சொல்ல ஊட்டி குளிர்ல போட ஒரு ஜெர்கின் அம்மிணி குடுத்து விடறாங்க அத மெட்ராஸ்ல போட ஆரம்பிச்ச ஈரோ படம் க்ளைமாக்ஸ் வரைக்கும் கழட்டவே இல்ல.
இவர் மேட்ச் ஆட போன சமயத்துல ஈரோயின் அம்மிணி செத்துபூடறாங்க அது ஏன் எப்படின்னு படத்துல ஒரே வரில சொல்லிடறாங்க அதனால அது வேணாம் இப்ப. ஈரோயின் செத்தத நம்பாம உயிரோட இருக்கிறா அப்படின்னு பொணத்த ஆஸ்பத்திரில இருந்து எல்லாரையும் அடிச்சி போட்டுட்டு தூக்கிகிட்டு ஓடறார் ஓடறார் நடுவுல எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் கொன்னுட்டு ஓடறார்.
பொணத்தோட. பொணத்தோட பேசறார், பாட்டு பாடறார், சாப்பாடு ஊட்டறார், தண்ணிகுடிக்க குடுக்கறார் முடியலடா சாமி
தமிழ்பட தியரிப்படி ஒரு வெள்ளை தாடி வெச்ச சொட்ட டாக்டர் போலீஸ்க்கு ஒரு நேசனல் ஜியோக்ராபிக் விடியோ போட்டு காமிச்சு ஒரு கொரங்கு எப்பிடி செத்து போன அதோட குட்டிய தூக்கிகிட்டு சுத்துதோ அதுமாதிரிதான் இது ஈரோவுக்கு பைத்தியம் எல்லாம் இல்ல பாசம் ஜாஸ்தியாகி அப்பிடி பண்றார் (ஈரோவால எத்தினி பேர் செத்தா என்ன )ஈரோ தண்டிக்க பட வேண்டியவர் இல்ல வாழவேண்டியவர்னு சொல்ல சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு நமக்கு பிபி ஏறரதுதான் மிச்சம். யாராவது சைக்கோவ (ஈரோவ) கொன்னு படத்தை முடிங்களேண்டானு நம்ம எல்லாரையும் கதற வெச்சிடறார் டைரக்டர்.
டைரக்டர் சார் நாங்கல்லாம் பாவம் இல்ல :((