ஜூனியர் குசும்பன் பராக்!


தாய் சேய் இருவரும் நலம் என அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள் குசும்பா.

அன்புடன்

மங்களூர் சிவா & பூங்கொடி

சரிங்க மிஸ்

என்ன சொன்னது எல்லாம் புரிஞ்சதா??
சாப்பிட்டு தூங்காம, இண்டர்நெட்டு அது இதுன்னு டைம் வேஸ்ட் பண்ணாம நான் சொன்ன வேலை எல்லாம் சாயந்திரம் வருவதற்குள்ள முடிச்சு வைச்சிருக்கணும். இல்லைனா நான் பேசமாட்டேன் இந்த டஸ்டர்தான் பேசும்.

பி.கு1 : தங்கமணிக்கு வேலை கிடைத்துள்ளது. லெக்சரராக மூன்று நாட்களாக மங்களூரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றுவருகிறார்.

பி.கு2 : லேபிளில் குறிப்பிட்டுள்ளவை கற்பனையே.

திருமண நாள் வாழ்த்து




குசும்பா, உன் வாய்க்கொழுப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து இப்படி கையைக் கட்டி நடித்தே ஒரு வருடம் கடந்துவிட்டாய். இந்த ஓராண்டை விட இன்னும் அதிக மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீ இன்னும் நூறாண்டுகள் கடக்க எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். குசும்பனுக்கும் சகோதரி மஞ்சுவிற்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...!

மங்களூர் சிவா & பூங்கொடி

காதலர்தின வாழ்த்துக்கள்




நண்பர்கள் அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்.

Posted in Labels: |

சர்க்கரை பொங்கல் செய்(த)முறை

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

அரிசி = 1 பங்கு
வறுத்த பாசி பயறு = 1/3 பங்கு
சர்க்கரை = 1 பங்கு
தேங்காய் பால் = 2 பங்கு
நீர் = 3 பங்கு
முந்திரி பருப்பு = 18 சரியாக (கூடவோ குறையவோ கூடாது)
உலர்ந்த திராட்சை = 2 மே.க

செய்முறை:

1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.

2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். தீய்ந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.

3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் முந்திரி & உலர்ந்த திராட்சையும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

Posted in Labels: |