படிங்க சிரிங்க....
Posted On Thursday, June 19, 2008 at at 6:28 PM by மங்களூர் சிவா வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
_________________
ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?
மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________
கோவிலில் இருவர்..
யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?
ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய் போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
_________________
கல்யாண வீட்டில்..
மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?
அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?
கரண்ட் கட் ஆனதும் மண்டபமே கிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________
புலிகேசி : அமைச்சரே.. எனக்கு இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.
மங்குணியார் : ஆகட்டும் மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?
புலிகேசி : என்னை மக்கள் எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள். அதனால் தான்..
_________________
சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு சாப்பிடலாமே?
என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.
_________________
நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?
மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.
_________________
ஊர்ல சாப்பாடு எங்க விற்கும்?
ஊர்ல மட்டுமில்ல.. எல்லா ஊர்லயும் தொண்டைல தான் விக்கும்.
_________________
டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு?
நண்பர் : படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது பழக்கதோஷத்துல எந்திரிச்சு வெளியே போயிட்டார்.
டாக்டர் : அதனால அடிபடுமா?!
நண்பர் : இவர் படம் பார்த்தது விமானத்துல ஆச்சே!
குருவி பார்த்திருப்பாரோ?
_________________
என்னைக் கடிச்ச கொசுவைப் பிடிச்சேன். அப்புறம் கொல்லாம பறக்க விட்டுட்டேன்.
ஏண்டா?
பயபுள்ள.. அது உடம்புல(!) இருக்கறது நம்ம ரத்தமாச்சேடா! அந்தப் பாசம்தான்.
பீலிங்ஸ் ஆஃப் இந்தியன்ஸ்
_________________
கோயில்ல ஒரு பையன் “பிள்ளையார் மாமா காப்பாத்து”ன்னு வேண்டிக்கிட்டான். அது ஏன்?
எதுத்தாப்ல ஒரு வயசுப் பொண்ணு “பிள்ளையார் அப்பா காப்பாத்துப்பா”ன்னு வேண்டிக்கிட்டு இருந்தா.. அதனால தான்..
கரண்ட் பாலிடிக்ஸ்
Posted On Saturday, March 1, 2008 at at 10:53 AM by மங்களூர் சிவாமுன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!
கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!
குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.
கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.
குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது
கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!
குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!
குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.
கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.
குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.
குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.
கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!
குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?
கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!
குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)
பின் குறிப்பு: நன்றி கோபி அவரின் 2005ம் வருட இந்த பதிவு இப்போதைய தமிழ்மண நிகழ்வுகளை பிரதிபலிப்பதால ஒரு மீள்பதிவு
கோலங்கள் கோலங்கள்
Posted On Friday, October 19, 2007 at at 6:05 AM by மங்களூர் சிவா"அவள் போடும்
கோல அழகைவிட
அவள் கோலம் போடும்
அழகே அழகு"
கரண்ட் இல்லாமல் கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு கை ஒடிந்தது போலிருந்தபோது பழைய ஆனந்தவிகடனை புரட்டிகொண்டிருந்தேன். அப்போது படித்த கவிதை கு.நாகராஜ் என்பவர் ஏப்ரலில் எழுதியது. கரண்ட் வந்ததும் அதை ஸ்டேடஸ் மெஸ்ஸேஜாய் போட்டிருந்தேன்.
‘ராம்’ சாட்டில் வந்து இது பா.விஜய் எழுதின கவிதையா அப்படின்னு கேட்டார். இல்லன்னு சொல்லிட்டு கோலம் பற்றிய flash back ல் மூழ்கிவிட்டேன்.
நான் சின்ன பையனா இருக்கப்ப எங்க அம்மா சாமிக்கு முன்னாடி ஒரு ஸ்டார் கோலம் போடுவாங்க. உம்மாச்சிக்கு அதுதான் ஸ்டாண்டர்ட்.
வாசலில் அதிகபட்சமா நடு வரி 9 புள்ளி அதன் பிறகு இரண்டு பக்கமும் இரண்டிரண்டு புள்ளிகளாக குறைந்து வந்து ஒரு புள்ளியில் முடியும் அதில் முறுக்கு பிழிந்ததை போல ஒரு கோலம். அவர்கள் காலத்தில் அதுதான் பாட்டி சொல்லி கொடுத்திருந்தார்களா என தெரியாது.
பொங்கல், தீபாவளி வந்தால் என் அக்காள் தெருவையே கூட்டி பெருக்கி யாரும் நடக்க முடியாத அளவிற்கு தெருவையே அடைத்து கலரிங் எல்லாம் செய்து கோலம் போடுவாள். பின் அதில் ஹாப்பி பொங்கல், ஹாப்பி தீபாவளி என எழுதி வைப்பாள்.
நான் தூங்கி எழுந்து பார்க்கும் போது பாதி கோலம் அழிந்தே போயிருக்கும் இருந்தாலும் மிக அழகாக இருக்கும். என் ஊரில் அனேகமாக எல்லார் வீடுகளிலும் இது போல பெரிய பெரிய கோலங்கள் போடுவார்கள்.
எப்படி அம்மாவிற்கு இவ்வளவு பெரிய கோலமெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் இருந்தது. சில வருடங்களில் அதற்கான விடை கிடைத்தது.
அண்ணன், அக்கா, நான் எல்லாரும் கிராமத்திலேயே படித்ததால் ஒரே பள்ளியில்தான் படிப்பு. அவள் அப்போது 12ம் வகுப்பு. வீட்டில் படிப்பதற்க்காக நோட்டு நோட்டாக வாங்கி கொடுக்க அவள் பள்ளியில் அவள் தோழிகளுடன் சேர்ந்து கோலம் போட்டு பழகியிருக்கிறாள் என்ற உண்மை ரிசல்ட் வந்த அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது.
எல்லோரும் அவளை திட்டு திட்டென்று திட்ட இதுதான் சாக்கு என நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவன் போல ஆக்ட் கொடுத்து நாலு சாத்து சாத்திவிட்டேன். எவ்வளவு வாங்கியிருப்பேன் எப்ப கணக்க தீர்த்துக்கறதாம்.
அதன் பின் நான் கல்லூரி முடித்து சென்னைவாசியானேன் அங்கெல்லாம் இப்படி பெரிய கோலங்களை பார்த்ததாக நினைவில் இல்லை.
ஈரோட்டில் தினமலரில் வேலை பார்க்கும்போது கோலப்போட்டி நடத்துவார்கள் அப்போது ஆர்கனைசராக சென்ற ஞாபகம்
“அவள் போடும்
கோல அழகைவிட
அவள் கோலம் போடும்
அழகே அழகு”
என அழகான பெண்கள் கோலம் போடும்போது நினைத்திருக்கிறேன் ஆனால் இப்படி கவிதையாக எழுதி வைத்ததில்லை.
மங்களூர்வாசியான பின் அதுவும் இல்லை. நான் பார்த்த கடைசி கோலம் சன் டிவியில் தேவயானியுடையது
கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்
(டொய்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ண் டொய்ண் டட
டொய்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ண் டொய்ண் டட)
ஆணென்பதும் பெண் என்பதும்
ஆண்டவன் கோலங்களே
இப்படி ஒரு ஐந்து நிமிசத்துக்கு அந்த பாடல் போகும் தேவயானியும் அதில் நடந்துகொண்டே இருப்பார் தினமும். அன்றைக்கு கிளம்பியிருந்தால் இந்நேரம் மங்களூருக்கே வந்து சேர்ந்திருக்கலாம்.
பாட்டு முடிந்தவுடன் அவசர அவசரமாக சேனலை மாற்றிவிடுவேன்.
இது வரைக்கும் பார்த்த கோலம் இதன் பிறகு கேட்ட கோலம். எப்போதாவது ஊருக்கு செல்லும் போது வேறு வழியில்லாமல் அம்மாவுடன் சேர்ந்து அழுவாச்சி சீரியல்கள் பார்ப்பேன்.
அம்மாவும் சன் டிவியை போட்டுவிட்டு அடுப்படிக்கு போய்விடுவார் நான் சேனல் மாற்றினால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக வந்து திரும்ப சன் டிவிக்கு மாற்றிவிட்டு திரும்ப அடுப்படிக்கு போய்விடுவார் அப்படி வேறு வழியில்லாமல் பார்த்தது இல்லை இல்லை கேட்டது மலர்கள் என்ற தொடரில் வரும்
அரிசி மாவால “கோலம்” போடு
அரளி பூவால மாலை போடு
மாலை போடு
......
......
அரிசி மாவு கோலத்துக்கும் அரளி பூ மாலைக்கும் என்ன சம்பந்தம் என யோசித்துக்கொண்டே இரண்டு மூன்று நாட்கள் அந்த விளங்காத சீரியலை பார்த்தேன் அதுக்குள் அந்த பெண் “வைஷ்ணவி” சூசைட் செய்து செத்து போய்விட்டது. அடடா நாம ரெண்டு நாள் சீரியல் பார்த்ததுக்கு இவ்வளவு எஃபக்ட்டா என நினைத்துக்கொண்டு அதன் பிறகு எந்த சீரியலும் பார்ப்பதில்லை.
உங்களுக்கு பிடிக்காத சீரியல் சன் , ஜெயா, விஜய்யில் வந்தால் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு போங்கள் (அந்த மூன்று சேனல்தான் இங்கே வருகிறது) அதை பார்த்து நிறுத்தி வைக்கிறேன்.
