படிங்க சிரிங்க....
Posted On Thursday, June 19, 2008 at at 6:28 PM by மங்களூர் சிவா வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
_________________
ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?
மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________
கோவிலில் இருவர்..
யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?
ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய் போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
_________________
கல்யாண வீட்டில்..
மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?
அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?
கரண்ட் கட் ஆனதும் மண்டபமே கிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________
புலிகேசி : அமைச்சரே.. எனக்கு இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.
மங்குணியார் : ஆகட்டும் மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?
புலிகேசி : என்னை மக்கள் எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள். அதனால் தான்..
_________________
சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு சாப்பிடலாமே?
என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.
_________________
நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?
மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.
_________________
ஊர்ல சாப்பாடு எங்க விற்கும்?
ஊர்ல மட்டுமில்ல.. எல்லா ஊர்லயும் தொண்டைல தான் விக்கும்.
_________________
டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு?
நண்பர் : படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது பழக்கதோஷத்துல எந்திரிச்சு வெளியே போயிட்டார்.
டாக்டர் : அதனால அடிபடுமா?!
நண்பர் : இவர் படம் பார்த்தது விமானத்துல ஆச்சே!
குருவி பார்த்திருப்பாரோ?
_________________
என்னைக் கடிச்ச கொசுவைப் பிடிச்சேன். அப்புறம் கொல்லாம பறக்க விட்டுட்டேன்.
ஏண்டா?
பயபுள்ள.. அது உடம்புல(!) இருக்கறது நம்ம ரத்தமாச்சேடா! அந்தப் பாசம்தான்.
பீலிங்ஸ் ஆஃப் இந்தியன்ஸ்
_________________
கோயில்ல ஒரு பையன் “பிள்ளையார் மாமா காப்பாத்து”ன்னு வேண்டிக்கிட்டான். அது ஏன்?
எதுத்தாப்ல ஒரு வயசுப் பொண்ணு “பிள்ளையார் அப்பா காப்பாத்துப்பா”ன்னு வேண்டிக்கிட்டு இருந்தா.. அதனால தான்..
நகைச்சுவை தோரணம்
Posted On Wednesday, June 18, 2008 at at 7:01 PM by மங்களூர் சிவா"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய நமது வீரர்களை எல்லாம்மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?
ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம் அரண்மனையின் தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது;
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;
நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயாடாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம் நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...
நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~''நேற்று இரவு நான் மாறுவேஷத்தில்நகர்வலம் வந்தது மக்களுக்கு எப்படித் தெரிந்தது!"
"தங்கள் காதில் வைத்திருக்கும் துண்டு பீடியை வைத்துக் கண்டுபிடித்துவிட்டார்கள் மன்னா!"
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே
தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார் ஜட்டி விளம்பரத்துக்கு பணம் வாங்கியிருக்காரு!
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"நம்ம தலைவருக்குப் பொன்னாடை போர்த்திக் கொள்வதில் அலாதி பிரியம்...
அதான் அடிகடி சலூனுக்குப் போறாரா...!?,,
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?
"டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~''என்னப்பா காபியில் சராய வாடை அடிக்குது?'
''காபி மாஸ்டர் வரலை சரக்கு மாஸ்டர் தான் காபி போட்டார் அது தான்.!''
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"நம்ம இன்ஸ்பெக்டரோட பேச்சைக் கேட்டு தொப்பையை குறைச்சது தப்பாப் போச்சு...!''
''என்னாச்சு?''
மப்டியில இருக்கறப்போ போலீஸ்கரன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டேங்கறான்!''
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"சாட்சி சொல்லும் போது, நீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற?''
''நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.''!
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"டிராஃக் போலீஸ்பக்கத்துல நின்னுகிட்டு எதுக்கு செல்போன்ல பேசறீங்க?
அப்போதானே சிக்னல் கிடைக்கும்"!
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"என்னய்யா பழைய ஜோக்கா எழுதிட்டு வந்திருக்கே...
ரீ மிக்ஸ் ஜோக்ஸ் சார்!"
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?
இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னுபாக்க ஆசையா இருக்கு...
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க"
பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~''எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும் பாட்டிலோட க்யூவில் நிற்கறாங்க?'' "சரக்கு ' ரயில் வருதாம் ''
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''
நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~''மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது.''
"என்ன போர் அறிவிப்பா?''
''ம்ஹும்.... சாணை பிடிப்பவர் வந்துள்ளார்.!"
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள் ?
"நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது ஹி... ஹி... ஹி... !''
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"எதுக்கு போலீஸ்காரர் தபால்காரர் கூட சண்டை போடறாரு?''
"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில், தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!"
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!'' '
'சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவி தான் விட்டேன்...!''~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~