திருமணம் - ஓர் அலசல்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இன்னைக்கு ஒரு சூப்பர் பதிவோட வந்திருக்கேன். இந்த டாபிக் இதுக்கு முன்னயே பல ப்ளாக்களில் அலசி, துவச்சி, காயப்போட்டு இருந்தாலும் என்னைக்குமே இது ஒரு யுனிவர்சல் டாபிக், எவர் க்ரீன் மேட்டர்.


கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா,
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா?

என்று கவிஞர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதினாலும், தாலி சென்டிமெண்ட் வெச்சு ஆயிரம் படம் வந்தாலும் யாருக்காவது கல்யாணம்னு பேச்சு வந்தாலே கூட இருக்கிற பய புள்ளைக சும்மா இருக்கிறானுவளா அதான் இல்லை மாட்டிகினான்யா ‘நயா பக்ரா’, இன்னும் எப்டி எப்டியெல்லாம் ஓட்ட முடியுமோ ஓட்டறானுங்க (அட என்னை இல்லிங்கோ நான் இன்னும் மாட்டல)..

கல்யாணம் கட்டிகிட்டா மவனே நீ காலின்னு சொல்ற மெயில் எல்லாம் தேடி தேடி அனுப்பறானுங்க.

சிரிங்க சிரிங்க!! நல்லா சிரிங்க!!!
இப்பவே சிரிச்சாதான் உண்டு!!

இத்தனை அலம்பலும் பன்றவன் கல்யாணம் பண்ணவன். கேட்டா நாளைக்கு என்னய மாதிரி நீ கஷ்டப்பட கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்திலதாங்கிறனுவ. பாசக்கார பயலுவ.



சில விஷயங்கள பேசி புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம். இந்த டாபிக் அதுல ஒண்ணு. திருமணம் அவசியமா என்பது அவரவர் கண்ணட்டோத்தை பொறுத்தது தான் என்பதே என் கருத்து.

திருமணம் நாமே வகுத்துக்கொண்டே ஒரு ஆடிமைத்தனம், மனிதன் தனக்கு தானே வைத்துக்கொள்ளும் சொந்த செலவு சூன்யம் என்பது மற்றொருவரின் வாதம்.

திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப் பட்ட விஷயம். இது ப‌லருக்குத் தேவைப் படுகிறது, சிலருக்குத் தேவைப் படாது. இது அவசியம் அனாவசியம் என்று சொல்ல முடியாது.

தேவைப் பட்டால் செய்து கொள்ளுங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் ஒரு அப்துல் கலாம் போலவோ ஒரு வாஜ்பாய் போலவோ இருந்து கொள்ளலாம் தவறில்லை.

இன்னொருவரின் கருத்து
அவசியம் - கல்யாணம் ஆகாதவங்க நினைச்சுக்கறது.
அனாவசியம் - கல்யாணம் ஆனவங்க நினைக்கிறது.
திருமணம் என்பது கட்டாயம் வேணும். ஏன்னா வெறுமனே சந்தோஷமா மட்டும் இருந்தா வாழ்க்கை போரடிச்சிடும்.

மேலைத் தேசங்களில் 'ஒன்றாக கூடி வாழுதல்' எனும் முறையும் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் அந்த முறையில்தான் வசிக்கிறார்கள். எனக்கு என்னமோ இந்த முறையால் பிற்பாடு நிச்சயமாக பிரச்சினைகள் வரும் என்று தோன்றும்!!ஏதோ அப்படி இருப்பவர்களுக்கு அது ஒத்து போச்சுனா சந்தோஷம்.


இன்னொரு நண்பரின் பதில் இது. கல்யாணத்துக்கு முன்பு இது எனக்கு பயங்கரமான கேள்வியாக இருந்தது. யாரிடமும் இருந்து ஒத்துக்கொள்கிற மாதிரியான பதில் இல்லை. இப்ப யாராவது என்னிடம் கேட்டாலும் சரியான பதில் கொடுக்கமுடியாது. வேண்டுமென்றால் இப்படி சொல்வேன். "முயற்சித்து தெரிந்து கொள்". இது QUIZ நிகழ்ச்சி அல்ல,விடை தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு.

இன்னொருவரின் கருத்து, நான் ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம். அதுவும் ‘அரேஞ்ஜ்ட் மேரேஜ்’ என்றால் உதறல் அதிகமாகிறது. யார் என்றோ, எப்படி என்ன என்றோ தெரியாத ஒரு பெண்ணுடன் எப்படி திருமண வாழ்வை துவக்குவது?. நம்மளையோ எந்த பொண்ணும் லவ் பண்ணப் போவதில்லை. நம்ம வாய் அப்படிங்க! எந்த பொண்ணு வந்து பேசினாலும், அடுத்த 10 நிமிடத்தில் ஓடிப் போயிருது. :-) சரி.. உங்க கேள்விக்கு வருவோம்...ஆண் logically driven. பெண் emotionally driven. வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்க இந்த இரண்டும் அவசியம். எனவே நம்முடன் கடைசி வரை கூட வரும் நண்பர்களில் எதிர் பாலினரும் அவசியம். நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தாலும், உலகத்துக்காக கல்யாணம் என்று ஒன்று பண்னியே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் நான் நடிகர் பிரகாஷ்ராஜ் கட்சி. கல்யாணத்துக்குப் பின்னும் நல்ல நண்பர்களாகத் தொடரும் வரையில் கல்யாணம் ஒன்றும் அவிழ்க்க முடியாத விலங்கல்ல. எங்கேயோ படித்தது. "விட்டுக் கொடுத்து வாழ்வதல்ல வாழ்க்கை. புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை" அப்டினு ஒரு வழியா முடிச்சார்.

உங்களுக்கு எதாவது புரிஞ்சதா? எனக்கும் அதே நிலை தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

QUOTE
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கை கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால இப்படி நிக்கிறதுதான் வழக்கம்.

காதல் திருமணம் சிறந்ததா Arranged திருமணம் சிறந்ததா? என்பது
தற்கொலை சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா? என கேட்பதுவும் ஒன்று.

Posted in |

பொன்னியின் செல்வன் - ஆன் லைன்

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை, சென்னை நூலகத்தின் வலைப்பக்கத்தில் இருக்கிறது. ஆற அமர ஒவ்வொரு பக்கமாக நீங்கள் படிக்கலாம். உங்கள் எல்லொருக்கும் யான் பெற்ற இன்பம் பெருக இவையகம் என்று உங்களுக்கும் இதோ..

Posted in |

நீங்களூம் யோசிங்க

இது சொந்த சரக்கு அல்ல.. ஆனா, அதுவா முக்கியம் நமக்கு..

டீல்

உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ் அனுப்புறேன்.அதே மாதிரி, என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்புறீங்களா?-

போட்டு வாங்குவோர் சங்கம்

சிக்குன் குனியா

சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!-

சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே யோசிப்போர் சங்கம்

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும்
கருவி அரியர்

அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்

அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம்வாக்-இன் சென்றே சாவார்

- படிப்பவரை கண்டால் வயிரெறிபவர் சங்கம்

ரிசல்ட்

ரிசல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா லீவு நாளு நரகமாயிரும்.. சந்தோசம்தாங்க முக்கியம்-

பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்

Posted in |

தேவதாசு-2

இடைவேளைக்கு முன்னாடிப் படம் பார்க்காதவங்க போயி முதல் பாதியப் பார்த்துட்டு வாங்க... இங்க

இதயம் பலகீனமானவங்க தொடர்ந்து படிக்க வேண்டாம்.

ஆங்..இடைவேளைக்கு முன்னாடி, நான் ஒரு விஷயத்த சொல்ல மறந்துட்டேன்….அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, பானுவுக்கு, தேவ் ஒரு காதல் பரிசு கொடுப்பார் --அது ஒரு, ஒரு ரூபாய் நாணயம்….( கொடுக்கும் போதே, “ஆனந்தம்” படம் மாதிரி, இந்த ஒத்த ரூபாய வச்சி ஒரு பாட்டுப் போடுவாங்கன்னு எதிர் பாத்தேன்!நல்ல வேளை பாட்டெல்லாம் எதுவும் இல்ல…

ஆனா அந்த ஒரு ரூபாய வச்சி……அப்புறம் சொல்றேன்….)இடைவேளைக்கப்புறம் பாரதியார் பானுவ , அமெரிக்கா கூட்டிட்டுப் போயிடறார்.அமெரிக்காவுல ஒரு காட்சி:ஒரு ரெஸ்டாரண்ட்ல பானு குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க…அப்போ பாரதியார் , பானுவுக்கு எப்படி தேவதாஸ மறக்க சொல்லி மறைமுகமா சொல்றதுன்னு யோசிக்கிறார்…உடனே பானுகிட்ட இருந்து தேவ் கொடுத்த அந்த ஒத்த ரூபாய எடுத்து, அத பாத்துக்கிட்டே “ பானு! இந்தியாக் காசெல்லாம் அமெரிக்காவுல செல்லாதுமா”ன்னு சொல்லிட்டு அதத் தூக்கிப் போடறார்.

அந்த வசனத்துலேயே எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற புத்திசாலி பானு, ஓடிப் போய் அந்தக் காச எடுத்துக்கறாங்க.பானுவும் பதிலுக்கு ஒரு வசனம் பேசுறாங்க “அப்பா! நீங்க வேணா அமெரிக்கா வந்த வுடனே இந்தியாவ மறந்திருக்கலாம், நான் மறக்கல” அப்பிடின்னு சொல்றாங்க…அதுக்கு பாரதியார் நேரடியா விஷயத்த சொல்வாரு : “இங்க இருக்கவங்கள்ல ஒரு மாப்பிள்ளைய செலெக்ட் பண்ணு, உனக்கு சீக்கிரமே கல்யாணம்”

கொஞ்சம் யோசிச்சுட்டு பானு சொல்வாங்க : “உங்க இஷ்டம்ப்பா”( என்ன தேவதாஸ காதலிச்சுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க பானு ஒத்துக்கிட்டாங்களேன்னு அதிர்ச்சியா இருக்கா…கொஞ்சம் பொறுங்க…முடிச்சு(!) அவிழும் )

இப்போ இந்தியாவுல ஒரு காட்சி :ஏமாத்தி, பானுவ அவங்கப்பா அமெரிக்கா கூட்டிட்டுப் போய்ட்டத, நண்பர்கள்ட்ட சொல்லி வருத்தப்படறார் தேவ்.தேவதாஸ உடனே அமெரிக்கா கெளம்ப சொல்லி நண்பர்கள் உசுப்பேத்துறாங்க….நான்….எப்படி….அமெரிக்கா….ப்ச்….அப்பிடின்னு கமல் மாதிரி ரியாக்ஷன் காட்டுறார் தேவ்….

அப்போ அது வரைக்கும் காமெடி பண்ணிக்கிட்டு இருந்த தேவோட நட்புவட்டாரம்….., நட்பப் பத்தி ஒரு மினி லெக்சர் எடுக்கறாங்க….தியேட்டரே ஒரு மயான அமைதியில இருக்கு…எல்லாத்துக்கும் மேல எனக்கு பக்கத்துல உக்காந்திருந்தவர் எங்க நான் பார்த்திடுவனோன்னு எனக்குத் தெரியாம கண்ணத் தொடச்சிக்கிறார்… ( சோகத்துல அழுகறாராமாம் )எனக்கு அழுவதா இல்ல சிரிக்கிறதான்னு தெரியல ….

லெக்சர் முடிஞ்ச வுடனே எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து தேவதாஸ சென்னைக்கு அனுப்பி வைக்கறாங்க…சென்னை வர்ற தேவ், அமெரிக்க தூதரகத்துக்குப் போறார்….அவர் அனாதை, சொந்த வீடு இல்லை அப்பிடி இப்பிடி காரணம் சொல்லி அங்க அவரோட விசா அப்ளிகேஷன ரிஜக்ட் பண்ணிடறாங்க……( ரிஜக்டட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 4 தடவ திருப்பி திருப்பி காட்டுறாங்க…எங்களுக்கு நெஞ்சுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அப்பிடியே இடிஞ்சு போய் நிக்கற தேவ், ஒரு நடை பிணமா, பீச்ல சுத்தறார்…பிண்ணனியில ஒரு சோகப் பாட்டு பாடுது….ரோட்ல நடந்து வரும்போது தேவ் ஒரு கார்ல மோதி விழறார்…கார்ல இருந்து எறங்கி வர்றது யாருன்னு பாத்தா…படம் ஆரம்பிச்சப்போ ஒரு குத்துப் பாட்டுக்கு தேவோட ஆடின மழை ஷ்ரேயா…

தேவோட கதைய முழுசாக் கேட்ட ஷ்ரேயா சோகம்+கோபத்துல கண் செவக்கறாங்க…உடனே செல்லெடுத்து ஒரு மியூசிக் டைரக்டருக்கு போன் போடறாங்க….அவரு டைரக்டருக்கு போன் போடறார்…டைரக்டர் ஷ்ரேயாக்கிட்ட பேசறார்…. ஷ்ரேயா “கண்டிப்பா நீங்க எனக்காக இத பண்ணனும் “ அப்படின்னு சொல்றாங்க…அடுத்த நாள் பாத்தா ஒரு ஷூட்டிங்க்காக ஒரு சினிமா குழு அமெரிக்காப் போகுது… ஒரே ராத்திரியில அந்தப் படத்துக்கு அஸிஸ்டண்ட் டைரக்டராய்ட்டார் நம்ம தேவ்…அஸிஸ்டண்ட் டைரக்டர்ங்கறதால உடனே விசா கெடைச்சுடுது….அந்த சினிமாக் கூட்டத்தோட தேவும் அமெரிக்கா போய்டறார்…( அப்ரூவ்ட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 10 தடவ திருப்பி திருப்பி காட்டுறாங்க…எங்களுக்கு முதுகுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அமெரிக்கா ஏர்போர்ட்ல எறங்குற தேவோட கெட்டப் : அமெரிக்க கொடி ப்ரிண்ட் ஆகியிருக்கிற ஒரு கோட் மாதிரி ஒரு பனியன்…தலைக்கு ஒரு குல்லா….ஏர்போர்ட்ட விட்டு “ஹே …ஹே…”ன்னு கத்திக்கிட்டே ஒரு “ஏ இந்தா..ஏ இந்தா” னு ஒரு ஆட்டத்த போட்டுக்கிட்டு வெளியே வர்றார்….தேவ் கையில ஒரு 2000 டாலரக் குடுத்துட்டு “All the Best” சொல்லிட்டு மறைஞ்சுடறார் அந்த டைரக்டர்...( நீங்க புத்திசாலியா இருந்தீங்கன்னா இவர் தான் இந்த படத்தோட உண்மையான டைரக்டர்னு நான் சொல்லாமலேயே புரிஞ்சுப்பீங்க! )

தேவ், எப்படியோ பாரதியாரோட வீட்ட கண்டுபிடிச்சு அது முன்னாடி நின்னு நோட்டம் விட்டுக்கிட்டு இருப்பார். பாரதியார் வந்து அமெரிக்காவுல ஒரு செனட்டர்…அதனால பாதுகாப்பு அதிகமா இருக்கும்….திடீர்னு தேவ போலீஸ் சுத்தி வளைச்சுடுது….“who r u?”“what r u doing here”அப்பிடின்னு போலீஸ் துப்பாக்கி முனையில அவர மெரட்டுவாங்க….(….தியேட்டரே திக் திக் னு துடிச்சுட்டு இருக்கு…)

அங்க தான் ஹீரோ தன்னோட மூளையப் பயன்படுத்துவார்…தன்னோட Passport, visa எல்லாத்தையும் எடுத்துக் காட்டி தான் ஒரு Assistant Director, location பாக்கிறதுக்காக வந்ததா சொல்லி தப்பிச்சுடுவார்…( தியேட்டரில் விசில் பறக்கிறதுன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணுமா? )

அப்புறம் தேவ் தனியா அமெரிக்காவுல சுத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு பொண்ணு ( கண்டிப்பா அது ஒரு தெலுங்குப் பேசற பொண்ணு! ) ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போறத பாக்குறார்…அதுக்கிட்ட போய் இங்க இருந்து குதிச்சா தப்பிக்க சான்ஸ் இருக்கு, அதோ அந்த பில்டிங் மேல இருந்து குதிச்சீன்னா உடனே சாகலாம், அப்பிடின்னு ஐடியா கொடுப்பார்.

தன்னோட மனச திசை திருப்பதான் சொன்னான்னு, லேட்டா புரிஞ்சிக்கிற அந்த பொண்ணு, தேவ் பின்னாடியே வந்து “நீ போனதுக்கப்புறம் நான் தற்கொலை பண்ணிக்கிட்டா என்னப் பண்ணுவ? “ அப்பிடின்னு கேட்கும்…

“ஒரு தடவ தற்கொலை பண்ணிக்கப் போய் தப்பிச்சவங்க, அதுக்கப்புறம் சாகத் துணிய மாட்டாங்க” அப்பிடினு ஒரு அற்புதமான(!) வசனத்த அசால்ட்டா சொல்லிட்டு கேஷுவலா நடக்க ஆரம்பிச்சுடுவார் நம்ம தேவ்.அதுல இம்ப்ரஸ் ஆகுற அந்தப் பொண்ணு தன்னோட “காதல் தோல்வி சோக”த்த தேவ்கிட்ட கொட்டுது.தேவ் தன்னோட சோகத்த கொட்டுவார்.

அதக் கேட்டுட்டு ஃபீல் ஆகுற அந்த பொண்ணு தேவ் காதலுக்கு தான் உதவி பண்றதா சொல்லி,அவளோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போகுது…இதுக்கு நடுவுல பானுவுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க….மாப்பிள்ளை குடும்பத்துக் காரங்க எல்லாம் பொண்ணு பாக்குற வைபவத்துக்காக நம்ம பாரதியார் வீட்டுக்கு வருவாங்க….( அமெரிக்கா போனாலும் பொண்ணு பாக்கப் போற பழக்கம் இன்னும் மறக்கல )

( பாரதியார் வீட்ல நீங்க பாக்க வேண்டிய விஷயம் சுவர்ல “புஷ்”சோட போட்டோ மாட்டியிருப்பாங்க…அவர் அங்க அரசியல்வாதி இல்லையா? டைரக்டரோட அறிவப் புரிஞ்சுக்குங்கப்பா!) ( புஷ் கால்ல பாரதியார் விழற மாதிரி ஒரு சீன் கிராபிக்ஸ்ல பண்ணியிருந்தாங்களாம்…எடிட்டிங்ல போயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன் )

“சரி பொண்ண வரச் சொல்லுங்கப்பா”- மாதிரி ஒரு வசனத்த தெலுங்குல ஒரு பெருசு சொன்னவுடனே மாடிப் படிய காட்டுறாங்க….தழையத் தழையப் பொடவையக் கட்டிக்கிட்டு, வெட்கப்பட்டுக்கிட்டே பானு, மாடிப்படியில இருந்து எறங்கி வரும்னு எதிர்பார்த்தா ஒரு கவர்ச்சிப் பாட்டுக்குத் தேவையான காஸ்ட்யூம்ல எறங்கி வந்து நடு வீட்டுல ஒரு குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க….ஆடி முடிச்சுட்டு,“நான் தேவதாஸ தான் கல்யாணம் பண்ணிப்பேன், தேவத் தவிர வேற யாருக்கும் எம் மனசுல எடமில்ல” அப்பிடின்னு வசனம் பேசிட்டு மாடிப்படியேறிப் போய்டுது….

சரி வந்ததுக்கு ஒரு டான்ஸாவது பாத்தமே அப்பிடின்னு ஜொள்ள தொடச்சிட்டு மாப்பிள்ளை வீட்டுக் காரங்களும் கெளம்பி போய்டுவாங்க….

கோபம் தலைக்கேறின நம்ம பாரதியார், நேரா மாடிக்குப் போறார்…எதிர்பார்த்த மாதிரியே பானுவ ஒரு ரூமுக்குள்ள தள்ளிப் பூட்டி வச்சிடறார்.நம்ம மாமி ( அதாம்ப்பா தேவதாஸையும், பானுமதியையும் சேத்து வைக்கிறதுக்கு உதவி பண்றேன்னு சொன்ன பொண்ணு ) ,தேவ்க்கு ஒரு புது செல்லு, ஒரு புது காரு…எல்லாம் வாங்கிக் கொடுக்குது….எப்படி பானு வீட்டுக்குள்ள நுழையறதுன்னு ரெண்டு பேரும் யோசிக்கறாங்க…

ஒரு சூப்பர் ஐடியா ( பாரதியார பேட்டி எடுக்கிற மாதிரி அவர் வீட்டுக்கு போறது ) கண்டு பிடிச்சு அவர் வீட்டுக்குப் போறாங்க…அங்க இருக்க பத்திரிக்கைக் காரங்க கூட்டத்துக்கு நடுவுல எப்படியோ பூந்து வீட்டுக்குள்ள போய்டுவார், தேவ்…அங்க பானு இருக்கிற ரூமக் கண்டுபிடிச்சு…ஜன்னல் வழியா பானுவக் கூப்பிட்டு எதோ பேச ஆரம்பிப்பார்…அதுக்குள்ள பாரதியார் உள்ள வந்திடுவார்….

தேவ், ஒளிஞ்சு ஒளிஞ்சு ஒரு பேப்பர்ல எதையோ எழுதி அந்த வீட்டு நாய்(!)கிட்ட கொடுத்திட்டு எஸ்கேப் ஆகிடுவார்…

நாய் வாயில ஒரு பேப்பர் இருக்கிறத பாத்துட்டு பாரதியார் அத எடுக்கப் போக, அதுக்குள்ள வேலக்காரர் அத எடுத்து படிக்க ஆரம்பிச்சுடுவார்…( பானு, பாரதியார், பானுவோடப் பாட்டி, அந்த நாய், எல்லார் முகத்தையும் க்ளோஸ் அப் ல காட்டுறாங்க…ஒரு விதப் பதட்டமும், பரிதவிப்பும் தெரியுது எல்லார் முகத்திலயும், இப்ப உங்க முகத்துல கூடத் தான் J)“I MISS U” னு அதுல எழுதி இருக்கு ….

எதையோ சொல்லி பானுவோட பாட்டி பாரதியார சமாளிச்சுடுவாங்க…ஆனா அத கவனிக்கிற பானு, பேப்பர், பென்ஸில் எடுத்து, அத டீக்கோட் பண்ணி, தகவலப் புரிஞ்சுக்குவாங்க……( அது என்ன தகவல்னு கதைய மேலப் படிக்காம சரியாக் கண்டுபிடிச்சு பின்னூட்டமாக இடுபவருக்கு இந்தப் படத்தோட சிடி பரிசாக(!) உங்கள் செலவில் அனுப்பி வைக்கப்படும்! )

அடுத்த நாள் பானு, தேவ்க்கு ஃபோன் பண்ணி பேசுறாங்க…ரொம்ப நாள் கழிச்சு காதலர்கள் பேசிக்கிறத வெறும் வசனத்துல எப்படிக் காட்டறதுனு யோசிச்ச டைரக்டர், அவங்கள அப்படியே போன்லேயே ஒரு பாட்டு பாட வச்சிடறார்….

ஃபோன்ல பாடிக்கிட்டே அவங்களும் பீச், பார்க் எல்லாம் போய்ட்டு வந்திடறாங்க…ஒரு தடவ, பாரதியார் வீட்டு மாடியில இருந்து கீழ லிஃப்ட்ல போய்க்கிட்டு இருப்பார்…அதப் பாக்குற பானு, ரூம்ல இருக்க பல்ப எடுத்துட்டு, பல்புக்கு பின்னாடி தேவ் தந்த ஒரு ரூபாய வச்சி திரும்பவும் பல்ப மாட்டிட்டு, சுவிட்ச்சப் போட்டு, ப்யூஸ் போக வச்சிடுவாங்க…கரண்ட் போனதால லிஃப்ட் பாதியிலேயே நின்னுடும்…

லிஃப்டுக்குள்ள மாட்டுன பாரதியார், ஏதோ சுனாமியே வந்துட்ட மாதிரி கத்துவார், கதறுவார், கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி ஆளுங்க வந்து ப்யூஸ் சரி பண்ணி, லிஃப்ட கீழ எறக்குவாங்க…லிஃப்டத் தொறந்து தொபுக்கடீர்னு வெளில வந்து விழுவார் – பாரதியார்…

டிரெஸ் எல்லாம் நனஞ்சு போயிருக்கும்.. ( பயத்துல வியர்த்து கொட்டிடுச்சி வேற ஒன்னும் இல்ல! )சந்திரமுகி மாதிரி லக..லக..லக…ன்னு சிரிச்சுட்டு “இந்தியாக் காசு அமெரிக்காவுல செல்லாதுன்னு சொன்னீங்களே – இப்ப எப்படி உங்கள பயமுறுத்துச்சி பாத்தீங்களா” அப்பிடின்னு பானு, தன்னோட அப்பாவப் பாத்துக் கேட்பாங்க….

தியேட்டர்ல ஒரே கைத்தட்டல் தான் போங்க!!பானுவ எப்படி வீட்டுச்சிறையில இருந்து மீட்கறதுன்னு தேவும், மாமியும் தீவிரமா யோசிச்சு ஒரு ஐடியா பண்ணி பானுவுக்கு போன் பண்ணி சொல்றாங்க….அடுத்த நாள் பானுவ கோயிலுக்கு கூட்டிட்டுப் போகறதுக்கு பாரதியார்ட்ட பர்மிஷன் வாங்கிடறாங்க பானுவோட பாட்டி….

கார்ல பானு, பானுவோட பாட்டி, பாரதியார், வேலைக்காரர் எல்லாரும் கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கும்போது வழியில ஒரு பஞ்சாபிக் கூட்டம் “பல்லே பல்லே”னு டான்ஸ் ஆடிக்கிட்டு வருது….

கார்ல இருந்து எறங்கி எல்லாரும் வேடிக்கைப் பாக்குறாங்க…பஞ்சாபிப் பொண்ணு ஒன்னு ஒரு பஞ்சாபிக் குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது…. அத , பாரதியார், வாயப் பொளந்து வேடிக்கப் பாத்துட்டு இருக்கிற கேப்ல, தேவும், மாமியும், வந்து பானுவ கடத்திட்டுப் போய்டுவாங்க….டென்ஷன் ஆகிடற நம்ம பாரதியார் போலீஸ், அடியாள் எல்லாரையும் அனுப்பி பானுவ தேடச் சொல்றார்..

பானுவையும், தேவதாஸையும், கார்ல கூட்டிட்டுப் போற மாமி, ஒரு தனித் தீவுக்கு வந்து சேர்றாங்க….“இந்தத் தீவுக்கு யாரும் வர முடியாது, உங்கள யாரும் கண்டுபிடிக்க முடியாது, எஞ்சாய்”- அப்பிடின்னு சொல்லிட்டு மாமி எஸ்கேப் ஆகிடறாங்க….பானுவப் பாத்து தேவ் கேட்பார் : “ நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா” அப்பிடின்னு…சரி ஏதோ கண்ணாமூச்சி, நொண்டி இது மாதிரி ஏதோ விளையாடப் போறாங்கன்னுப் பாத்தா அது “செல்லமே” படத்துல வர்ற மாதிரி ஒரு வெவகாரமான வெளையாட்டு…

( என்ன விளையாட்டுன்னு கேட்கிறீங்களா? நான் மட்டும் 30 ரூபா குடுத்துப் பார்ப்பேன்…நீங்க ஓசியிலயே கேட்டுக்கலாம்னு பாக்குறீங்களா? அஸ்கு…புஸ்கு….அது மட்டும் முடியாது! )விளையாட்டு முடிஞ்சவுடனே பாட்டு ஆரம்பிக்குது… ( பின்ன என்னப்பா தனித்தீவு கெடைச்சதுக்கப்புறமும் ஒரு டூயட் பாடலைன்னா அவங்கல்லாம் என்ன காதலர்கள்? )

அவங்க அப்பிடியே இந்தியாவுக்கு தப்பிச்சுப் போயிட்டா படம் சப்புனு முடிஞ்சுடும் இல்லையா? அதனால பானுவக் கொண்டுவந்து திரும்பவும் பாரதியார் வீட்லயே விட்டுட்டு போனஸா ஒரு சவாலும் விட்டுட்டுப் போறார்…நம்ம ஹீரோ!சவால் என்னன்னா :“ நீங்க பானுவ, எங்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி, நானும் உங்க முன்னாடியே அவளக் கடத்திட்டுப் போய் 24 மணி நேரத்துக்குள்ள அமெரிக்காவ விட்டேப் போயிடுவோம்….உங்களால முடிஞ்சா தடுத்துக்குங்க…”

இதக் கேட்டு முதல் முறையா பாரதியார் ( ரொம்ப நேரமா நானும் பாரதியார்னே சொல்லிட்டு இருக்கேன்! மன்னிச்சுக்குங்க நம்ம கதைல இனிமே அவர் – யூ. எஸ். செனட்டர் ) முகத்துல ஒரு கவலை ரேகை படியுது….படம் இப்ப சூடு பிடிச்சுட்டுதா தியேட்டர்ல ஒரு பரபரப்பு பத்திக்குது….எனக்குப் பக்கத்து சீட்காரர் தம்மெடுத்துப் பத்தவைக்கிறார்…

சொன்ன மாதிரியே பானுவ வூடு பூந்து கடத்திடறார் தேவ்…சோஃபா பின்னாடி, கதவு பின்னாடி ஒளிஞ்சு ஒளிஞ்சு, யூ. எஸ் போலீஸ் காதுல ( நம்ம காதுலையும் தான்! ) ஒரு ரெண்டு முழம் பூவ சுத்திட்டு பானுவக் கூட்டிட்டுப் போயிடறார்….கோபப்படற செனட்டர், போலீஸ்கிட்ட கத்துறார்…எப்படியாவது பானுவ 24 மணி நேரத்துல மீட்டுடனும்னு கட்டளை போடறார்…

போலீஸ் ஒரு பத்து ஹெலிகாப்டர எடுத்துக்கிட்டு அமெரிக்காவையே அலசி எடுக்கிறாங்க…செனட்டரும் தன்னோட பங்குக்கு ஒரு கார எடுத்துக்கிட்டு தெரு தெருவா சுத்துறார்….

காருக்குள்ள செனட்டர க்ளோஸ்-அப் ல காட்டுற கேமரா, அப்பிடியே மெதுவா வெளிய வந்து மேலப் போயி, கார டாப் ஆங்க்ள்-ல காட்டுது….கார் பின்னாடியே ஒரு அல்ட்ரா மாடர்ன் பஸ் ( ஸ்வதேஷ் படத்துல ஷாருக்கான் வருவார்ல – அது மாதிரி அட்டாச்டு பாத்ரூம், பெட்ரூம், டி.வி., எல்லாம் இருக்கிற ஒரு மினி வீடு மாதிரியான பஸ்) போய்க்கிட்டு இருக்குது….

இப்போ கேமரா அப்பிடியே மெதுவா கீழ எறங்கி, அந்த பஸ்சுக்குள்ள போகுது…..அங்க….ஹீரோ உக்காந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டு F-Tv பாத்துக்கிட்டு இருக்கார்….பஸ்சுக்குள்ளேயே இன்னொரு ரூம்ல இருந்து வர்ற பானு… இதப் பாத்துட்டு கடுப்பாயிடறாங்க….தேவ் ,” இல்ல பானு, அந்த ட்ரெஸ்ல ரொம்ப கவர்ச்சியா இருக்காங்க இல்ல?” அப்ப்டின்னு அசடு வழியறார்.எங்கடா இவன் நம்மள விட்டுட்டு எதாவது அமெரிக்காப் பொண்ண செட்டப் பண்ணிடுவானோன்னு பயந்த, பானு :“இந்தியாவோட புடவைல இத விட கவர்ச்சி அதிகம்” அப்பிடின்னு சொல்லிட்டு உள்ளப் போய்ட்டு கொஞ்ச நேரத்துல வெளிய வர்றாங்க…ஜன்னல், பால்கனி, போர்ட்டிகோ எல்லாம் வச்ச ஒரு ஜாக்கெட் போட்டுக்கிட்டு (பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துடாதீங்க !!!) ஒரு புடவைய சுத்திக்கிட்டு பஸ்சுக்குள்ள ஒரு “கேட் வாக்” நடக்கறாங்க…இது மாதிரி ஒரு நாலஞ்சு புடவைல மாறி மாறி நடந்து வந்து ஹீரோவத் தெணறடிக்கிறாங்க……….

நாங்க தெலுங்கு படத்துக்கு தான் வந்திருக்கோமா இல்ல மலையாள படத்துக்கு வந்திட்டோமான்னு ஒரு நிமிஷம் சந்தேகம் வந்திடுது….பானு மொத புடவைல வரும்போது சோஃபா மேல உக்காந்திருந்த தேவ் கடைசி புடவைல வரும்போது தரைல சரிஞ்சு கெடக்கறார்…உள்ள கேட் வாக் நடக்கிற அதே சமயத்துல வெளிய நம்ம செனட்டர் பாவம் கார்லயே அமெரிக்காவ குறுக்கும் நெடுக்கும் அளந்துக்கிட்டு இருக்கார்….

திடீர்னு செனட்டருக்கு ஒரு ஞாபகம் வருது….வீட்ல நாய் வாயில இருந்து ஒரு லெட்டர்ல “I miss you “னு வேலக் காரன் படிக்கும்போது, பானு பூடகமா சிரிக்கிறத நெனச்சிப் பாக்குறார்…அதுல ஏதோ விஷயம் இருக்குன்னு திரும்பவும் வீட்டுக்குப் போறார்.. பானு பெட்ரூம்லத் தேடி ஒரு பேப்பர எடுக்கிறார்…அதுலI – 9 m-13 i-9 s-19 s-19 u-219139191921 னு ஒரு ஃபோன் நம்பர் எழுதியிருக்கு…அந்த ஃபோன் நம்பர நெட்ல போட்டு தேடி, மாமியோட அட்ரெஸ கண்டுபிடிச்சிடறார்…

மாமி வீட்டுக்குப் போயி, மாமிய மெரட்டி, அவங்க மூலமா, பானுவும் தேவும் போய்க்கிட்டு இருக்கிற பஸ் நம்பர வாங்கிடறார், செனட்டர்….அடியாளுங்களுக்கு ஃபோனப் போட்டு பஸ் நம்பர சொல்லி மடக்கிப் பிடிக்க சொல்றார்…அதே சமயம் பானுவும் தேவும் அந்த பஸ்ல இருந்து எறங்கி வேற ஒரு காருக்கு மாறப் போறாங்க…

நம்ம பக்கத்து சீட்டுக்காரர் முகத்துல நிம்மதி தெரியுது….விடுவாரா டைரக்டர்?பஸ்ல எதையோ மறந்து வச்சிட்டதா சொல்லி திரும்ப எடுக்கப் போறாங்க பானு…அதுக்குள்ள அவங்கள ரவுண்டு கட்டிடறாங்க…நம்ம அடியாட்கள்!( ஆமா! நான்- அடியாட்கள், அடியாட்கள் னு சொல்றனே அமெரிக்காவுல அடியாட்கள் எப்படி இருப்பாங்கன்னு யாரும் கேட்கவேயில்லையே? அடியாட்கள் எல்லாரும் நீக்ரோ )பானுவையும், தேவையும் தனித் தனியா இழுத்துட்டுப் போயிடறாங்க…ஒரு இருட்டான எடத்துல, ஒரு முரட்டு நீக்ரோகிட்ட, தேவதாஸ தனியா விட்டுடறாங்க…அந்த நீக்ரோவும், தேவதாஸ கட்டி வச்சி, சரமாரியா அடிச்சுத் தாக்கிடுவார்….

திடீர்னு கட்ட எல்லாம் பிரிச்சிக்கிட்டு திமிறி வர்ற தேவதாஸ் பக்கத்துல இருந்த ஒரு இரும்பு ராட கையில எடுக்கிறார்…சரி நீக்ரோ தொலஞ்சார்னு பாத்தா…அந்த இரும்பு ராடால தன்னோட மண்டையிலேயே, நச்சு, நச்சு, நச்சு, நச்சு, நச்சுனு அடிச்சிக்கிறார் தேவ்……….

என்னடா ஒரு லூசுப்பயகிட்ட நம்மள தனியாவிட்டுட்டுப் போயிட்டாங்களேன்னு, பயந்து போற நீக்ரோ, பானுவ எங்க தூக்கிட்டு போயிருப்பாங்கன்னு சொல்லிடறார்…அந்த எடத்துக்கு கெளம்பிப் போறார் தேவ்….

(கொட்டாவியெல்லாம் அப்புறம் விட்டுக்கலாம் கதையக் கேளுங்க…)ஒரு பெரிய சண்டையெல்லாம் நடக்குது, துரத்தல் சீனெல்லாம் முடிஞ்சு….கடைசியா…தேவ்க்கு ரைட்ல ஒரு பைக் இருக்கு…லெஃப்ட்ல பானு நின்னுட்டு இருக்காங்க…எதிர்ல ஒரு 20 பேர் தேவ நோக்கி ஓடி வர்றாங்க…வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி எஸ்கேப் ஆயிடுவான்னு பாத்தா…தேவ் மட்டும் தெறிச்சு ஓட ஆரம்பிச்சுடுவான்…..அவனத் தொரத்திக்கிட்டே அடியாட்களும் போறாங்க…

பானுவும் என்னோட பக்கத்து சீட் காரரும் பேந்த பேந்த முழிக்கிறாங்க…அப்போ ஓடிக்கிட்டு இருக்க தேவ் சரக்குனு ஒரு U turn அடிச்சு மறுபடியும் வந்து வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி தப்பிச்சு போயிடுவான்………

ஏர்போர்ட்ட நெருங்கும்போதே செனட்டர் கிட்ட சொன்ன 24 மணி நேரம் தாண்டி ஒரு நிமிஷம் ஆயிடும்…அடுத்த காட்சி..செனட்டர் வீடு….

பானுவ கொண்டு வந்து அவங்க வீட்டுலயே வீட்டுட்டு செனட்டர பாத்து தேவ் இந்த வசனத்த பேசுவார் :“நீங்க இந்தியாவுல இருந்து பானுவ ஏமாத்தி இங்க அமெரிக்காவுக்கு கூட்டிட்டு வந்தீங்க அது உங்க கேரக்டர்!நான் சவால்ல சொன்ன மாதிரி 24 மணி நேரத்துக்குள்ள பானுவ கூட்டிட்டுப் போக முடியல…ஆனா சவால்ல தோத்துட்டு உங்கள ஏமாத்தி கூட்டிட்டுப் போக நான் விரும்பல…அதனால தான் பானுவ இங்க விட்டுட்டுப் போக வந்தேன்….இது தான் இந்த தேவோட கேரக்டர்”அப்பிடின்னு சொல்லிட்டு பானுவ அங்கேயே விட்டுட்டு அவர் மட்டும் தனியா ஏர்போர்ட் வந்துடுவார்….

சரி நம்மூர்ல ரெயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸ் சீன் காட்டுற மாதிரி தெலுங்குல கொஞ்சம் ரிச்சா, ஏர்போர்ட்ல காட்டுவாங்க போல இருக்குன்னு நெனச்சா….தேவ் பாட்டுக்கு ஃப்ளைட்ல ஏறிடுவான்..ஃப்ளைட்டும் கெளம்பிடும்…..இப்போ ஃப்ளைட்டுக்குள்ள காட்டுறாங்க…..

தேவ் அப்படியே நினவுகள்ல மூழ்கி சோகமா உக்காந்து இருப்பார்….அப்போ Air Hostess வந்து excuse me sir…chocolates please … அப்பிடின்னு சொல்லி சாக்லேட்ட நீட்டுவாங்க…ஒரு சாக்லேட்ட எடுத்து, கவர பிரிப்பார்…. கவருக்குள்ள எழுதி இருக்கும் --“we miss you” அப்பிடின்னு ….பின்னாடி திரும்பிப் பாத்தா பானுவும், செனட்டரும் “ஈ”ன்னு இளிச்சுட்டு நிப்பாங்க….

“ஏ தெலுசா தெலுசா பிரேமம் தெலுசா…” பாட்டு திரும்பவும் ஒலிக்குது…………..

நீங்க கொஞ்சம் இதயம் வீக்கானவர்னா இந்த படத்தோட சில ஸ்டில்ச மட்டும் இங்க போயிப் பாருங்க :லேசான மனசுக் காரங்களுக்கு

இந்த படத்தோட சில காட்சிகளையாவது பாக்கனும்னு உங்களுக்கு மனசுல ஆசையும், தெம்பும் இருந்தா இங்கப் போயி பாருங்க :கொஞ்சம் தெம்புள்ளவங்களுக்கு

இவ்வளவுக்கப்புறமும், இல்ல ! நான் அந்தப் படத்தையே முழுசாப் பாக்கனும்னு அடம்புடிச்சீங்கன்னா…நீங்க ஆயுள் காப்பீடு எடுத்ததுக்கு ஒரு அத்தாட்சிய எனக்கு மின்மடலா அனுப்பி வையுங்க…அந்த படத்தோட DVD- ய இலவசமா நானே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Posted in |

தேவதாஸ் 1

நண்பரின் வலை பூவிலிருந்து...
நன்றி : அருட்பெருங்கோ

“தேவதாஸ்”..இல்ல…இல்ல…”தேவதாசூ” - இது தான் நான் முதல் முதல்லப் பார்த்த தெலுங்குப் படம். அந்த சுகமான சுமைய (சுமையான சுகத்த?) உங்ககிட்ட எறக்கி வைக்கதான் இந்தப் பதிவு!

போனப் பொங்கலப்ப நான் ஹைதராபாத்ல இருந்தேன். எப்படிப் பொங்கலக் கொண்டாடறதுன்னும் தெரியல,பொங்கலக் கொண்டாடாம விட்டா எதாவது தெய்வக் குத்தமாயிட்டா என்னாகறதுன்னும் பயம்! சரின்னு யோசிச்சுட்டுப் பக்கத்துல இருந்த தியேட்டருக்குப் போயிட்டோம் செகண்ட் ஷோவுக்கு. அதுக்கு முந்தின வாரம் தான் தமிழ் படமான “கஜினி”யும்,”காதலு”ம் தெலுங்குலப் பார்த்தோம். அந்த ரெண்டு படத்துல வந்த காதல் சோக ஃபீலிங்ல எங்க ரூம்ல மூணு நாளா ஒரு பய கூட சாப்பிடல. இப்ப அடுத்தப் படத்தோட பேரே “தேவதாஸ்” – அதுவும் நேரடித் தெலுங்குப் படம்.சரி நம்மலாம் சினிமாவுல தான் காதலப் பாக்க முடியும்னு மனசத் தேத்திக்கிட்டு அந்தப் படத்துக்கு போயிட்டோம்.

தியேட்டருக்குள்ள கூட்டம் அள்ளுது எப்படியோ எடத்தப் புடிச்சு உக்காந்தோம். இனி நான் அந்தப் படத்தோட கதைய சீன் பை சீன் சொல்லப் போறேன். அதனால வேற முக்கியமான வேல இருக்கிறவங்க போயி வேலையப் பாருங்க. இல்ல நானும் அந்தப் படத்த பார்ப்பேன்னு அடம்புடிக்கிறவங்க தொடர்ந்து படிக்கலாம். வி….தி……வ.லி..ய…து……..

பழைய தமிழ் படத்துல சென்னையக் காட்றதுன்னா மொதல்ல எல்.ஐ.சி கட்டம், அப்பிடியே அண்ணா சமாதி, பீச், இப்பிடி முக்கியமான லேண்ட்மார்க் லாம் காட்டுவாங்கல்ல! அது மாதிரி அமெரிக்க சுதந்திர தேவி சிலை, அப்புறம் இன்னும் முக்கியமான லேண்ட்மார்க்லாம் காட்டிட்டு அமெரிக்காவப் பத்தி ஒரு முன் குறிப்பு சொல்றாங்க. அப்புறம் கஜினியில சூர்யா வருவார் இல்ல ஒரு காரு – அது மாதிரி ஒரு காரக் காட்றாங்க – அதுக்கு முன்னாடி ஒரு கார் + பின்னாடி ஒரு கார் போகுது—அப்படியே ஒரு ஃபார்ம் ஹவுஸ் முன்னால போயி நிக்குது.

இப்ப காரோட கதவ க்லோஸ்அப்ல காட்றாங்க – ரெண்டு கால் கீழ எறங்குது அப்பிடியேக் கேமராவ மேலத் தூக்குனா நம்ம ஹீரோ நிக்கிறார்----னு நீங்க நெனச்சா அதான் இல்ல… கோட் சூட் போட்டுக்கிட்டு நம்ம பாரதியார் ( அதாம்ப்பா பாரதி படத்துல பாரதியாரா நடிச்சாரில்ல அவரு தான் ) நிக்குறாரு. அவரப் பத்தி ஒரு முன்னுரக் கொடுத்திட்டு வீட்டுக்குள்ளப் போகுது கேமரா.

உள்ள ஒரு துளசி மாடத்த சுத்திக் கிட்டு இருக்காங்க நம்ம பாரதியாரோட அழகானப் பொண்ணு இல்ல – வயசான அம்மா.அந்தம்மா, வீட்டு வேலக்காரர சத்தம் போட்டு கூப்பிடறாங்க – கேமரா இன்னும் உள்ள போகுது – போர்வையப் போத்தி அந்த வேலக்காரர் தூங்கிகிட்டு இருக்கார். ஒரு நாய் வந்து அந்த போர்வைய இழுக்குது - அவர் போர்வைய விடாம தூங்கறார். நாய் யோசிக்குது. டப்னு அவர் மூஞ்சியில உச்சாப் போயிடுது – அவர் எழுந்துடுறார் – இங்க தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது – நாங்களும் முயற்சி பண்ணோம் – மு..டி…ய….ல.

அடுத்த சீன் ஒரு கடலக் காட்றாங்க – கடலுக்குள்ள இருந்து ரெண்டு கை மட்டும் மேல வருது -- எல்லாரும் சீட் நுனிக்கு வர்றாங்க -- எதிர்பார்த்த மாதிரியே ஹீரோயின் அறிமுகம்! அவங்க கடல்ல சோப்புப் போட்டு குளிக்கறாங்க – கதைக்கு தேவப்படுதில்ல !! --- அப்புறம் ஒரு சங்க எடுத்து காதுல வக்கிறாங்க.. அதுல ஒரு ட்யூன் கேக்குது அவங்களுக்கு – அந்த ட்யூன்ல அப்பிடியே ஒருப் பாட்டு பாடறாங்க – ஆடறாங்கஇப்ப ஸ்க்ரீன்ல ஒரு ஸ்லைடு போடறாங்கA sea shore – America 12 noon.

பாட்டுப் பாதியிலேயே கேமரா இந்தியாவுக்கு வருது ….ஒரு ஓட்ட பைக்ல நம்ம ஹீரோ கித்தார (அதுக்கு பேரு என்னப்பா கித்தாரா? சித்தாரா?) வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கார். அப்பிடியே காத்துல எதையோ தேடறார் – புடிச்சிட்டார் – அமெரிக்காவுல இருந்து காத்துல வந்த அந்த ட்யூன கப்புனு புடிச்சு கபால்னு இவரு ஒரு பாட்ட பாடறார்ஸ்லைடு போடறாங்க --A slum Area – Hyderabad 12 midnight.

அப்புறம் ஸ்க்ரீன்ல பாதி அமெரிக்கா பாதி ஐதராபாத் --- அப்படியே கிராபிக்ஸ் வித்தையெல்லாம் காட்றாங்க. பாட்டு முடியுது.அந்த சங்குல கேட்ட சங்கீதத்துல மயங்கின நம்ம ஹீரோயின் சங்கீதம் கத்துக்கிறதுக்காக அவங்க பாட்டிய சொல்லிக்கொடுக்க சொல்றாங்க.பாட்டி இந்தியாப் போன்னு ஐடியாக் கொடுக்கவும், அப்பா(பாரதியார்)கிட்ட பர்மிஷன் வாங்கி இந்தியா கெளம்புறாங்க, பாத்தியும் , பேட்டியும் ..ச்சீ… பாட்டியும் பேத்தியும்.

இப்ப நம்ம ஹீரோ குரூப்பக் காட்றாங்க ஒரு குட்டி சுவத்துல ஒரு அஞ்சு பேரு உக்காந்திருக்காங்க அதுல ஒருத்தர் ஹீரோ, இன்னொருத்தர் காமெடியன் – தெலுங்கு விவேக் –மத்தவங்க எடுபிடி….நம்ம “காம”டியன் ஒரு பொண்ணக் கரக்ட் பண்றதுக்கு இரட்டை அர்த்தத்துல ஒரு வசனம் பேசி அடி வாங்கறார்….இப்பவும் தியேட்டரே குலுங்குது --- எங்களால மறுபடியும் முடியல….

அப்ப அந்த பக்கம் ஒரு சூப்பர் பைக்ல ஒரு ரெமோ வர்றார் – இந்த பக்கம் ஒரு சூப்பர் காஸ்ட்யூம்ல ஒரு சுமாரான பொண்ணு வந்து நம்ம ரெமோ பைக்ல ஏறி உக்கார்றாங்க – அத ஒரு 7 ஆங்கிள்ல காட்றாங்க --- அவரு உடனே நம்ம ஹீரோ குரூப்ப வெறுப்பேத்தறதுக்காக பைக்ல வீலிங் பண்றாரு --- வண்டி நின்ன எடத்துல முன்னாடி வீல் மட்டும் அப்படியே ஒரு 45 டிகிரி மேல தூக்குது ( கவனிக்க வேண்டிய விஷயம் வண்டிய அவர் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல )….

அப்புறம் ரெமோ ஒரு லுக் விட்டுட்டு நம்ம ஹீரோ பைக்க இடிச்சுட்டு போகப் பாக்கறார்- அதுக்குள்ள பிரச்னையாயிடுது. சமாதானம் பேசற ரெமோவோட கேர்ள்ஃப்ரெண்ட் ஒரு பந்தயம் வக்கிறாங்க. அது - பைக் ரேஸ் – அந்த பைக் ரேஸ ஒரு 3 நிமிஷம் காட்றாங்க – அதுல ஹீரோ குரூப்ப ரெமோ குரூப் ஏமாத்தி ஜெயிச்சுடுது.//ஹீரோ குரூப் – கவர்மெண்ட் காலேஜ் ரெமோ குரூப் – ப்ரைவேட் காலேஜ்ஒருத்தங்க மத்தவங்க ஏரியாவுக்குள்ள வந்தா வெளி ஏரியா குரூப்காரங்க லோக்கல் ஏரியா குரூப் காரங்களோட ஷூவ தங்களோட கர்ச்சீப்ல தொடச்சிட்டு அதுல தங்களோட முகத்தத் தொடச்சிக்கணும் – இது அவங்களுக்குள்ள இருக்குற (இயக்குனரால்) எழுதப்பட்ட சட்டம்!!! //

அடுத்த சீன் ஒரு கோயில் – இந்தியாவுக்கு வந்த நம்ம ஹீரோயின் அந்த கோயிலுக்கு வர்றாங்க – கோயில்ங்கறதுன்னால ஹீரோயின் தாவணியில வர்றாங்க – பண்பாட்டக் காட்டனும்ல? அந்த தாவணில எவ்ளோ பண்பாட்டக் காட்டமுடியுமோ அவ்ளோக் காட்றாங்க. நம்ம ஹீரோவும் அங்க தான் சாமிக் கும்பிட்டுக்கிட்டு இருக்கார். அப்ப அவர் ஒரு தோட்ட கீழப் பாக்குறார். யாரோடத் தோடுன்னு தேடிப்பாக்குறார். அப்ப சைட் ஆங்கிள்ல நம்ம ஹீரோயின் காதப் பாக்குறார் அதே மாடல் தோடு இருக்கு. அப்ப அந்தப் பக்க காதுல இருக்க வேண்டிய தோட்டதான் அவங்க மிஸ் பண்ணிட்டாங்கன்னு இவரு அறிவுப்பூர்வமா சிந்திச்சுட்டு இருக்கும்போது ஹீரோயின மிஸ் பண்ணிடறார்.மறுபடியும் மூளையக் கசக்கிப் புழிஞ்சு யோசிச்சு – கோயில்ல மைக்ல பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தவர எழுப்பி விட்டுட்டு இவர் மைக்ல விஷயத்த சொல்றார் --- தேவதைத் தேடி வர்றாங்க - வெளக்கெல்லாம் அணைஞ்சுடுது - இரூட்டுலயே ரெண்டு பேரும் பேசிக்கறாங்க – போகும்போது ஹீரோயின் மனசுக்குள்ள very interesting character அப்பிடின்னு சொல்லிட்டுப் போறாங்க. ஹீரோ ஒன்னுமே நடக்காத மாதிரி கேஷுவலா போயிடறார் – ஹீரோ இல்லையா அந்த கெத்து வேனுமில்ல?

அடுத்த நாள் காலேஜ் ஏரியாவுல ஹீரோயினும் ரெமோவும் மீட் பண்றாங்க – ஹீரோயின் அமெரிக்காவுல இருந்து வந்தவங்க இல்லையா அதனால பசங்கத் தோள் மேலக் கை போட்டு பழகறத எல்லாம் சகஜமாவே எடுத்துக்குவாங்க --- ஆனா அதப் பாக்குற ஹீரோவுக்கு வயிறு வாய் எல்லாம் எறியுது.அப்புறம் ஹீரோயினும் ரெமோ பைக்ல ஏறிடுவாங்களோன்னுட்டு பபிள் கம்ம எடுத்து ரெமோ பைக் சீட்ல ஹீரோ ஒட்டி வச்சிடறார். ஹீரோயின் அதனால பைக்ல ஏறாம அவங்க கார்ல போய்டறாங்க. ஹீரோவோட அந்த ஐடியாவுக்காக தியேட்டரே கை தட்டுது. நாங்க காறித்…… துப்ப முடியாததால முழுங்கிடறோம்.

அப்புறம் ரெமோ, வந்து ஹீரோயின ஒரு பார்ட்டிக்கு கூப்பிட்டுப் போயி தப்பா நடக்கப் பாக்கறார் – ஹீரோயின் அவனக் கன்னத்துல அறைஞ்சுட்டு மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்துல ஓடறாங்க – பின்னாடியே ரெமோ மணிக்கு 950 மீட்டர் வேகத்துல தொரத்தறாரு…..எதிர்பார்த்த மாதிரியே ஹீரோயின் , ஹீரோக்கிட்ட போய் தஞ்சம் ஆகறாங்க – ஹீரோ ரெமோவ அடிக்காம அடுத்த நாள் காலேஜ்ல எல்லாரும் பாக்குற மாதிரி பைக் ரேஸ் ஏற்பாடு பண்ணச் சொல்றாரு….அடுத்த நாள் ஒரு பெரிய கேலரியில பைக்ரேஸ் – ஹீரோ ஜெயிக்கறார் – ஹீரோயின் வந்து ஹீரோவோட ஓட்டபைக்ல உக்கார்றாங்க –அத ஒரு 8 ஆங்க்ள்ல காட்றாங்க --- ரெமோ மாதிரியே ஹீரோவும் வீலிங் வுட்டுக் காமிக்கிறார்…அப்புறம் அப்படியே ஹீரோயினத் தள்ளிக்கிட்டுப் போறார்.

ஹீரோ : நீ எதுக்கு இந்தியா வந்த
ஹீரோயின் : சுத்திப் பாக்க
ஹீரோ: நான் உனக்கு உண்மையான இந்தியாவ சுத்திக் காட்றேன்….

அப்படியே பைக் ல வயல்வெளி, ஆறு, கிராமம், எல்லாம் சுத்தறாங்க…“லே பாபு ஏது சங்கதி ஹே ரைனா ஹே ரைனா” ன்னு தெலுங்கையும் இந்தியையும் மிக்ஸ் பண்ணி ஒரு பாட்டு இ…ழு…க்…க….றா….ங்…க…அப்புறம் ஒரு தடவ ரெமோ ஏரியாக்குள்ள ஹீரோ வந்துடறார்…அவங்க ரூல்ஸ்படி ரெமொ ஷூவ தொடச்சி தன்னோட முகத்த தொடச்சிக்கிறார்…அதப் பாக்கற ஹீரோயினுக்கு ஹீரோ மேல ஒரு இது அதாங்க பரிதாபம் வருது….அடுத்த சீன் :ஹீரோ குரூப்ல ஒருத்தன் வேகமா பைக்ல வந்து விழுந்து எழுந்து ஹீரோக்கிட்ட ஏதோ சொல்லுவான்….ஹீரோவும் கோபமா கெளம்பிப் போவார்…எதோ ஆக்ஷன் சீனுக்கு அஸ்திவாரம் போடறாங்கனுப் பாத்தா…அங்க நம்ம மழை ஷ்ரேயா நின்னுட்டு இருப்பாங்க….அதாவது ஒரு ஃபங்ஷனுக்கு டான்ஸ் ஆட வர்ற ஷ்ரேயா ரெமோ ஏரியாவுக்குள்ள ஆடப் போறாங்கங்கற செய்தி கேட்டு தான் ஹீரோ குரூப்ல இவ்ளோ பரபரப்பு…கமெடியன் போயி ஷ்ரேயாவ சுண்டு வெரலால தொடுவாரு அப்பிடியே ஷாக் அடிச்சு கீழ விழுந்துடுவார்….சிரிப்பலையில் தியேட்டர் குலுங்குகிறது…ஹீரோ பேசறதுல இம்ப்ரஸ் ஆகி ஹீரோ ஏரியாவுலயே ஆடறதுக்கு ஷ்ரேயா சம்மதிக்கிறாங்க…அந்த எடத்துல ஒருக் குத்தாட்டம் ஆடிக்கிட்டு இருந்தவங்க அப்படியே ஃபாரின் போயிடறாங்க……..அடுத்த நாள் தனியா வர்ற ஹீரோயின்கிட்ட ரெமோ வம்பு பண்றார்…ஹீரோயின் மெதுவா பின்னாடியே நடந்து போறாங்க…ரெமோ ஹீரோயின நெருங்கிப் போறார். அப்பப் பாத்து ஹீரோ குறுக்க வர்றார்.ரெமோ: இது எங்கப் பிரச்ன நீ தலையிடாத…ஹீரோயின் : இது அவங்க ஏரியா நீ எதுக்கு உள்ள வந்த?அப்பதான் ஹீரோவோட ஏரியாவுக்குள்ள தான் வந்துட்டத ரெமோ பாக்குறார்….தியேட்டர்ல எனக்குப் பக்கத்துல உக்காந்திருந்தவர் கையத் தொடைல தட்டி “அப்பிடிப் போடு”ன்னு உற்சாகமாகுறார்….

ஹீரோவோட ஷூவ தன்னோட கர்ச்சீப்பாலத் தொடச்சி ரெமோ தன்னோட முகத்துல தொடச்சிக்கறார். ஹீரோயின் ரெமோவ பழி வாங்குன சந்தோஷத்துல ஹீரோவோட பைக்ல ஏறி உக்காந்துக்குறாங்க…. பைக் அப்பிடியே அமெரிக்காப் போகுது…“தெலுசே தெலுசா பிரேமம் தெலுசா”ன்னு ஒரு பாட்டுபாட்டு முடிஞ்ச வுடனே ஹீரோயினக் கொண்டுவந்து அவங்க தங்கியிருக்குற ஹோட்டல் முன்னாடி விட்டுட்டு…திரும்ப எப்ப சந்திக்கலாம்னு ஹீரோ கேக்கறார்.“நாளைக்கு காலைல 10 மணிக்கு”“சரி”பைக்ல திரும்பிப் போகும்போது கணக்குப் போடறார் இன்னும் 12 மணி நேரம் 12*60 நிமிஷம் 12*60*60 நொடி எப்படி ஹீரோயினப் பாக்காம இருக்கிறதுன்னு யோசீச்சுட்டு திரும்பி ஹோட்டல் வாசலுக்கு வர்றார்.

ஹீரோயினும் அதே மாதிரி கணக்குப் போட்டுட்டு அங்க வந்து நிக்கறாங்க.ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாக்குறாங்க….பாக்குறாங்க….பாக்குறாங்க….தியேட்டர்ல ஒருத்தர் சவுண்ட்வுட்டதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஹோட்டலுக்குள்ள போறாங்க.

ஹீரோயின் தூங்கறதப் பாத்துக்கிட்டே ஹீரோ உக்காந்துருக்கார் இஞ்சி தின்னக் கு......திரை (எதுக்கு வம்பு?) மாதிரி…அப்ப பாத்து போன் அடிக்குது….ஆஃப் பண்றார்…மறுபடியும் அடிக்குது…எடுத்து கெட்ட வார்த்தைல திட்டிடறார்… (ஹீரோயின் தூக்கம் கெடுதாம்!!!)அந்தப் பக்கம் யாருன்னா நம்ம பாரதியார்.அடுத்த நாள்

ஹீரோவும் ஹீரோயினும் பைக்ல எங்கயோப் போறாங்க …..மழைப் பெய்யுது….கீழ எறங்கி ஒரு மரப் பொந்துல ஒதுங்கறாங்க……திடீர்னு ஒரு இடி இடிக்குது….பயத்துல ஹீரோவ கட்டிப் புடிச்சிடறாங்க ஹீரோயின்….ஹீரோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஹீரோயின் கன்னுத்துல ஒரு முத்தம் குடுத்திடறார்…..ஹீரோயின் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஹீரோ கன்னத்துல “பொளேர்”னு அறையறாங்க….“ச்சம்ப்ப்ர ராஸ்கல்” அப்பிடின்னு திட்டிட்டுப் போயிடறாங்க….

ஹீரோ பயங்கரமா ஃபீல் ஆகப் போறார்னு நெனச்சா அதான் இல்ல….அடி வாங்குன கன்னத்த தொடச்சிட்டு ஸ்க்ரீனுக்கு குறுக்கால கைய வச்சி ஸ்க்ரீன ரெண்டா கிழிக்கிறார்….அதுல இத்தாலி தெரியுது…அங்க ஹீரோவும் , ஹீரோயினும்“ நாப் ப்ரேம்மம் நூக் கஷ்டம்….நுவ்வண்டே நாக் கிஷ்டம்….”னு பாடிட்டுஜாலியா டான்ஸ் ஆடிறாங்க………..தியேட்டர்ல நாங்க நாலு பேரு மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்….எல்லாரும் எங்களையே ஒரு மாதிரி பாத்ததுனால நிறுத்திட்டு சிரிச்சி சிரிச்சி விழறோம்…

அப்புறம் ஹீரோ ஹீரோயின ஒரு எடத்துக்கு கடத்திட்டுப் போயி அவங்க கை கால கட்டிப் போட்டுடறார்…அவங்க கண்ணையும் கட்டி வச்சிட்டு காதல் டயலாக் பேசறார்….ஹீரோயின் அதெல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் அப்பிடிங்கறாங்க…ஹீரோ, ஹீரோயின் பின்னால போயி கட்டிப் புடிச்சு இப்படிதானே பைக்ல உக்காந்த அது ஃப்ரெண்ட்ஷிப்பா? ன்னு கேக்கறார்.ஹீரோயின் எதையும் யோசிக்க முடியாத மெய் மறந்த நிலைல இருக்காங்க!“என்னமோ எம் மனசுல இருந்தத சொல்லனும்னு தோணுச்சி சொல்லிட்டேன் அவ்வளவுதான்” - ஹீரோ( அதக் கொஞ்சம் எட்ட நின்னே சொல்லியிருக்கலாம்!)அப்பிடியே கெளம்பிப் போகும்போது அமெரிக்காவுல ஹீரோயின் சங்குல கேட்ட ட்யூன விசிலடிச்சுக்கிட்டேப் போவார் ஹீரோஅதக் கேட்ட வுடனே ஹீரோயின் மனசுல காதல் “பூம்”னு வெடிச்சு கெளம்பிடும்.ஆனா அதுக்குள்ள ஹீரோ கெளம்பிப் போய்டுவார்.

அடுத்த நாள் ஒரு டீக்கடைல ஹீரோ உக்காந்திருப்பார். ஹீரோயின் அவர்கிட்டப் பேசப் போவாங்க…விடு விடு ன்னு எந்திரிச்ச ஹீரோ அடுப்புல கொதிச்சிட்டு இருக்கட் டீய எடுத்து மட மடன்னு குடிச்சிடறார்( நாங்கூட ரொம்ப பசியில இருந்திருப்பார் போலன்னு நெனச்சேன்….அதில்லஹீரோயின் மேல அவ்ளோ கோபத்துல இருக்குறார்னு டைரக்டர் சொல்ல வர்றார்)வருத்தத்தோட வீட்டுக்கு வர்ற ஹீரோயின் எப்படி அவர்கிட்ட காதல சொல்றதுன்னு யோசிச்சுட்டு ஒரு ஐடியாப் பண்ணுவாங்க….ஒரு லெட்டர் எழுதி தன்னோட நாய்க்குட்டிகிட்ட குடுத்து அனுப்புவாங்க…

போன ஜென்மத்துல அந்த நாய் போஸ்ட் மேனா இருந்திருக்கும் போல…கரெக்டா ஹீரோ வீட்டுக்குப் போய் லெட்டர சேத்துடும்….லெட்டர பிரிச்சிப் பாப்பார் --- “91221” அப்பிடின்னு எழுதியிருக்கும்………..இது என்னடா ஒன்னும் புரியலன்னு ஹீரோ மண்டையப் பிச்சி யோசிப்பார் 9 – I, 12 – L , 21 – U , ILU = I love You அப்பிடின்னு அத டீக்கொட் பண்ணி புரிஞ்சிப்பார்( ரெண்டு பேரும்D a Vinci Code ஒவராப் படிச்சிட்டாங்கப் போல இருக்குது )உடனே ஆஸ்திரேலியா கெளம்பிடுவாங்க………ஒரு பாட்டு…….

இப்ப அமெரிக்காவுல இருந்து நேரா ஹீரோவோட வீட்டுக்கு வர்றார் பாரதியார்….“உன்ன எனக்கு புடிச்சிருக்கு….உனக்கே எம் பொண்ணக் கல்யாணம் பண்ணி வக்கிறேன்….”இப்படியெல்லாம் பேசிட்டு நேரா ஹீரொயினும் பாட்டியும் இருக்கிற ஹோட்டலுக்கு வருவார்…“இப்பதாம்மா தேவதாஸ(ஹீரோ)ப் பாத்துப் பேசிட்டு வர்றேன்…நம்ம அமெரிக்காப் போய்ட்டு அடுத்த சம்மர் லீவுல இந்தியா வந்து உன்னோடக் கல்யாணத்த முடிச்சிடலாம்” அப்படினு சொல்லுவார்…பானுமதிக்கு(ஹீரோயின் பேர்) சால ஆனந்தம்.உடனே அமெரிக்காப் போகனும்னு சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணிடுவார்….

கடைசியா காதலர்கள் சந்திக்கிறாங்க..பானுமதி: நேனு அமெரிக்காப் போயிதே…நூக்கு பாதகம் லேதா?தேவதாஸ் : பாதகம் லேது….சால ஆனந்தம்!பானு:ஆனந்தமா?தேவ்:ஆமா பானு தூரம் அதிகம் இருந்தா தான் காதல் திக்கா இருக்கும்!

பாரதியார் தேவ்க்கு ஃபோன் பண்ணி 9 மணிக்கு ஃப்ளைட் , ஏர்போர்ட் வந்துடுங்கறார்….ஆனா 7 மணி ஃப்ளைட்க்கே கெளம்பறாங்க………நம்ம ஹீரோ யாரு?அங்க 6 மணிக்கே வந்து உக்காந்துக்கறார்…..தன்ன ஏமாத்தி பானுவ அமெரிக்கா கூட்டிட்டுப் போக பாரதியார் பண்ற ப்ளான புரிஞ்சிக்கிறார்………பாரதியார்கிட்ட தனியாப் பேசுறார்:“என்ன இங்க எதிர்பார்க்கல இல்ல”“வந்து மட்டும் என்ன பண்ண முடிஞ்சது உன்னால”“நீ பானுவ ஏமாத்திக் கூப்பிட்டுப் போற”“நீயும் முடிஞ்சா அமெரிக்கா வந்து கூட்டிட்டுப் போ”“அமெரிக்கா வர்றேன் ---- உன்னப் பாக்குறேன் --- பானுவக் கூட்டிட்டு வர்றேன்”“லக லக லக லகா லகா லகா” ( ஒன்னும் இல்ல பாரதியார் சிரிக்கிறார்)

அப்ப பானு அங்க வர்றாங்க…பானு: என்ன டாடி சிரிக்கிறீங்கபாரதி:இல்லம்மா தேவ் ஒரு ஜோக் சொன்னார் அதான் சிரிக்கிறென்…லக…லக…சரி பேசிட்டு வாம்மா டைம் ஆயிடுச்சி…பானு: சரி போய்ட்டு வர்றேன்தேவ்: (நீ)போ…..(நான்)வர்றேன் ( என்ன டயலாக்! தியேட்டரில் விசில் பறக்கிறது!!!)

(ஸ்சப்பா…..இப்பவேக் கண்ணக் கட்டுதே…..இருங்கப்பு நான் போய் ஒரு டீத்தண்ணியக் குடிச்சுட்டு வர்றேன்….நீங்க எங்கியும் போயிறாதீங்க….இன்னும் பாதி சுமையக் கூட எறக்கி வைக்கல….ந்தா வந்துட்றேன்….)

தொடரும்
பார்ட்2

Posted in |

POOR GUYS OF INFOSYS

Written by Infosys Guys:

1. What is the beautiful girl called in Infosys?
A. Visitor.

2. What happens when all the Infosys girls go on a trip to moon?
A. Average beauty of the earth ncreases

3. What happens when hundred new girls join ?
A. Average beauty of Infosys further decreases.

4. What happens when a Infosys girl has very malignant brain tumor?
A. She will get her knee operated.

5. What happens when two Infosys girls meet generally at fashion show?
A. They will discuss the cause of the two smaller bugs in software.

6. What happens when a Infosys girl contests a fashion show?
A. She will get best possible points in the field of morale boosting.

7. What happens if you present a book named How to fall in love to a Infosys girl?
A. She will use it as a mouse pad.

8. When there is a competition in beauty and two Infosys girl! participate,its called a competition.
A. If a Infosys girl and other outside girl competes, its called overconfidence.

9. What happens when two Infosys girls compete for same guy?
A. He will commit suicide.

10. Where will an infi gal go on a date ???
A. to the library..

Quote: ~~~~~ Generally 99% of the girls in the world are beautiful, rest are in Infosys

Posted in Labels: , |

JUST 4 JOKE

ஜோக்ஸ்க்கு இன்னாபா தமிழ்ல நகைச்சுவையா? அப்டினா 'ஹுயுமர்'க்கு இன்னாபா? எது வேணா இருந்துட்டு போட்டும் இப்போதைக்கு இந்த ஜோக்கை படிச்சிக்குங்க.

திரும்ப அதே முன்னூட்டம் (பின்னால போட்டா பின்னூட்டம்னா முன்னால போடறது முன்னூட்டம் தானே)கோச்சுக்காதீங்கப்பு தமிழ்ல டைப் அடிச்சு தாவு தீருது. காப்பி ரைட் பிரச்சனை இல்லை (இதே சுட்டதுதான்) யார் வேணா தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிக்குங்க. இப்போதைக்கு இங்கிலிபிஸ்ல படிங்க.

"U love someone

U marry someone else.

The one u marry becomes ur wife or husband.

And the one u loved becomes the password of Ur mail id"

-------------

There's only one perfect child in the world & every mother has it.

There's only one perfect wife in the world & every neighbour has it.

---------------

If someone says u r ugly, its ok, if someone says u r stupid, its ok,

If someone says u r genius slap him as tight as you can n say there

is a limit of kidding n u r now crossing the limit.

------------ ---

Three dreams of a man:

To be as handsome as his mother thinks.

To be as rich as his child believes.

To have as many women as his wife suspects...

------------ ---

Husband & wife are like liver and kidney. Husband is liver & wife kidney.

If liver fails, kidney fails. If kidney fails, liver manages with other kidney.

------------ ---

What's the diff between Dava &d Daru?

Dava is like girlfriend, that comes with expiry date and

Daru is like wife, Jitni purani hogi utna sir chad ke bolegi.

------------ ---

Wife ko Begum kyon kehte hain?

Kyonki shaadi ke baad saare gum to husband ke hisse mein aate hain or

wife Be-Gum ho jaat hai.

------------ ---

The Japanese have produced a camera that has such a fast shutter

speed it can take a picture of a woman with her mouth shut

Posted in Labels: , |

JUST FOR LAUGH

சரி ப்ளாக் ஆரம்பிச்சாச்சு அதை ப்ரமோட் பண்ணனுமே அதுக்கு நேத்து அட்ரஸ் புக்ல இருக்கிற எல்லார் அட்ரஸ்க்கும் ஒரு மெயிலும் அனுப்பியாச்சு ஒரு ரெண்டு மனி நேரத்தில ஒரு போன், ஃப்ரெண்ட் ஒருத்தர் பெல்காம்லிருந்து கூப்ட்டு என்னமோ ஒரு லின்க் அனுப்பியிருக்க ஆனா அது படிக்க முடியல தமிழ்ல இருக்குன்றார். சரி அவருக்கும் மற்ற தமிழ் படிக்க வராத நண்பர்களுக்காகவும் அவ்வப்போது சில ஆங்கில பதிவுகள்.

A good friend comes 2 visit u in the hospital with flowers n goes. A True friend sits near u n says: O yaar, nurse bahut sunder hai... aaram se theek hona!

Do u remember the day we travelled in a car? I put my dog out of the window, u put ur face out, then people started shouting 'TWINS TWINS'

Telling a lie is a fault for a little boy, an art for a lover, an accomplishment for a bachelor and a Matter of Survival for a married man. Gud Luck!

Meaning of ABCDEFG : A Boy Can Do Everything For Girls. Reverse the letters GFEDCBA Girls Forget Everything Done & Catch new Bakra Again

A foolish man tells a woman to stop talking, but a wise man tells her that she looks extremely beautiful when her lips r closed !

An old rich man marries a young gal. Interviewer asks the girl: Apne inmein shaadi ke liye kya dekha?
Girl: Ek to inki income aur doosre inke din kum.Reverse dynamics:

When a man becomes rich he becomes naughty & when a woman becomes naughty.... she becomes rich.

A lady is standing on top of the hill n she is going to push her father down. So what's the name of the lady? Push......Paa.

Ravan was sent to court & was asked to keep a hand on Geeta.
He refused saying: Sita par hath rakh kar itni musibat aayi!
Ab Geeta pe haath nahin rakhunga

Ravan ki 20 aankhein thi magar nazar sirf ek aurat pe; jab ki aapki 2 aankhein aur nazar har aurat pe...! Toh asli Ravan kaun??

In a class, teacher asked: If I buy an item@ 12.75 n sell@15.25, it's loss or profit? Pappu: Profit in rupees & loss in paise

1980 girls: Maan mei Jeans pehanungi Maan : Nahin beti log kya kahengey?
2006 girls: Maan mein mini skirt pehanungi Maan: Pehen le beti kuch to pehan le!
Generation Next Motto: Na hum shaadi karenge, na apne bachchon ko karne denge

Posted in Labels: , , |

நட 'தி வாக்'

நட 'தி வாக்' சிவாஜி தி பாஸ் ஸ்டைலில் படிக்கவும்.

நேற்று உஷா அக்கா அவர்களின் "சர்க்கரை நீயா - நானா" படிக்க நேர்ந்தத அதில் அவர் இரண்டு லின்க் கொடுத்திருந்தார் ஒன்று தேசிகன் அவர்கள் பக்கம் இன்னொன்று டாக்டர் முருகானந்தம் அவர்களின் பக்கம். சரி ஒரு எட்டு போய் பார்ப்போம் என்று போய் பார்த்தேன் அதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நோயை தவிர்ப்பது எப்படி அல்லது சர்க்கரை நோய் இருப்பவர்கள் நோயின் தீவிரத்தை குறைப்பது எப்படி என்றெல்லாம் இருந்தது.

'ஜங்க் புட்' தவிர்த்தாலே ஏறக்குறைய வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சனைகளும் தீரும். இந்த பானி பூரின்னு ஒண்ணு விக்கறான் அவன் கடை எப்பவுமே எதாவது ஒரு டிச்சி பக்கத்துலயே இருக்கும். அவன் ஒரு நாள் வியாபாரத்துக்கு எல்லா தட்டயும் கழுவ ஒரே ஒரு பக்கட் தண்ணிதான் கொண்டு வருவான். அதுல ஒரு முக்கு முக்கிட்டு ஒரு பீத்த துணியால (பீ துணின்னும் படிக்கலாம்) ஒரு தொடை துடைச்சுட்டு குடுப்பான். நம்ம மக்களும் என்னமோ கோயில்ல உண்டை கட்டிக்கு நிக்கிற மாதிரி அவன் கிட்ட கை ஏந்தி நிக்கிறதுகள் யாரும் படிக்காத முட்டாள்கள் இல்லை டை எல்லாம் கட்டிண்டு இல்ல நிக்கிறாங்க. நார்த் இண்டியன்ஸ் இதுல ஃப்ர்ஸ்ட்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு உறவினர் வீட்டில் வாக் (walk) என்று புத்தகம் படிக்க நேர்ந்தது இரண்டு டாக்டர்கள் எழுதிய புத்தகம். அதில் இருந்து நினைவில் இருக்கும் தகவல்களும் மற்றும் வேறு படித்த தகவல்களும் இங்கே.

நடை பயிற்சி அல்லது நடப்பது எல்லா உடற்பயிற்சிகளையும் விட மிக எளிதான பயிற்சி. இதை 'ஏரோபிக் ப்ளஸ்' என்கிறார்க்ள். இதற்க்கு தனி கோச் எல்லாம் தேவை இல்லை. மனதும் நேரமும் மட்டுமே தேவை. சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் மட்டும் செய்ய வேண்டும் என்பது இல்லை. தினமும் ரெகுலராக நடப்பவர்களுக்கு சர்க்கரை / உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருந்தால் அது கட்டுக்குள் இருக்கும்.

அதை விட முக்கியமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தாலே சளி, தலைவலி போன்ற சிறு சிறு பிரச்சனைகள் வராது.

உடம்பு வெயிட் போடாமல் இருக்கும். ட்ரெட் மில்லில் நடப்பதை விட அதி காலையில் சாலையில் நடப்பது இன்னும் சிறப்பானது ஏன் என்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்லும் போது போர் அடிக்காது. மனசுக்கும் ரிலாக்ஸ்டாக இருக்கும்.

காலையில் வளி மண்டலத்தில் ப்ராண வாயுவின் அளவு (Oxygen) அதிகமாக இருக்கும். பொல்யூசன் இருக்காது. முதுமையாகுவது (Aging) மெல்ல ஆகும். (காலேஜ் / ஸ்கூல் விடும் டைம் என்றால் கண்ணுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் இது மட்டும் ஐயாவோட அடிஷன்).

அப்படி நடக்கும்போது கட் ஷூ அணிவதை விட லேஸ் கட்டும் ஷூ அணிவது நல்லது இது மட்டும் ஞாபகம் இருக்கு ஏன் என்று ஒரு ஐந்து பக்கத்துக்கு எழுதியிருந்தார்கள். அதெல்லாம் செலக்டிவ் அம்னீசியாவில போய் விட்டது.

எனவே தினசரி மிக குறைந்த பட்சம் முப்பது நிமிடங்கள் நடப்போம் ஆரோக்கியத்தை பேணுவோம்.

Posted in Labels: , , |

மங்களூர் சிறு குறிப்பு

மங்களூர் பற்றிய சிறு குறிப்பு. சிறு குறிப்பு தான் ஏனா இது நேத்ராவதி நதிக்கரையில் அமைந்த ரொம்ப சின்ன ஊர். ஊரை ஒரு சுத்து சுத்தி வந்தாலும் ஒரு 15 கிலோமீட்டர்தான் ஆகும்.

பழைய கேரளாவாக இருந்து எல்லை தகராறு பாக பிரிவினையில் கர்நாடகாவாக ஆன ஊர் இருந்த போதும் மேடு பள்ளமான ரோடுகள், பசுமையான இயற்கை கேரளாவை ஞாகபப்படுத்தும். ஊரை சுத்தி பாக்குறேன்னு 15 கிலோ மீட்டர் தாண்டி போயிடாதீங்க அப்புறம் எந்த மோனே எந்த வேணம்னு எதாவது ஒரு சேச்சி சம்சாரிக்கும். 15-20 வது கிலோ மீட்டரில் கேரளா வந்துவிடும்.

அன்னை மங்களாதேவி குடி கொண்டுள்ள இந்த ஊர் மங்களாபுரம் என அழைக்க பட்டு வந்தது மருவி மங்களூர் என்றாகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில எந்த ஊர் பேர்தான் நுழைஞ்சிருக்கு.

மங்களூரின் சிறப்பு என்னன்னு பார்த்தால் ஒண்ணும் இல்லிங்க அட நெஜமாதாங்க. ஆனா நீங்க உடுப்பி, கொல்லூர், தர்மஸ்தலா, சுப்ரமண்யா, ஹொரனாடு (ஷ்ரி அன்னபூர்னேஸ்வரி)எங்க போகனும்னாலும் மங்களூர்ல கால் வைக்காம போக முடியாது. (இது எங்க ஏரியா உள்ள வராதன்னு யாரும் சொல்லமாட்டாங்க.)

இங்க வருஷத்துல ஆறு மாசத்துக்கு மழை பெய்யுதுங்க அட நெசமாதான். ஆகா இவ்ளோ நல்ல விஷயம் இருக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டியேனு யாரும் குத்தம் சொல்ல வேணாம் நீங்க இருந்து பாத்தா தெரியும் எங்க போனாலும் கங்காரு அதோட குட்டிய தூக்கீட்டு அலையுற மாதிரி ரெயின் கோட் தூக்கீட்டு அலைய வேண்டியிருக்கு. துவைச்ச ட்ரெஸ் மாச கணக்குல காயுது.

மங்களூரில் பார்க்க வேண்டிய கோயில்கள்

1. மங்களாதேவி
2. கதிரி மஞ்சுநாதர் ஆலயம்
3. குதிரொளி கோகர்நதேஷ்வரா ஆலயம்.

மத்தபடி பீச் இருக்கு. வந்த புதுசுல ஆஹா மாப்ளை பீச்க்கு போலாம்னு ஒரு க்ரூப் கிளம்பி போனா எங்களையும் எங்க பக்கத்துல ஓடற நாயயும் சேர்த்து ஒரு 150 பேர் இருந்திருப்போம் அதுவும் ஞாயித்துகிழமை எங்கன சொல்லி அழ? நாங்கள்லாம் மெட்ராஸ்ல பீச் பாத்துட்டு பீச்னா அப்டிதான் இருக்கும்னு நம்பி வந்தவங்க. அப்புறம் பீச் பாக்குற ஆசையே போயிடிச்சு. இப்போல்லாம் ஞாயித்துகிழமை பீச்க்கு ஒரு 200 பேர் வாராங்களாம் நம்ம நண்பரின் தகவல்.
பிக் பஸார் ஆட்லாப்ஸ் தெரியுங்களா? அதுக்கென்ன அதுதான் எங்க ஊரில ஏழெட்டு இருக்கேனு மெட்ராஸ்காரங்க பெங்களூர்காரங்க சொல்றது கேக்குது. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை இந்த ஊர்ல ஒண்ணே ஒண்ணு இருக்கு அனில் அம்பானியும் காசை என்ன பண்றதுன்னு தெரியாம இங்க ஒண்ணு கட்டிபுட்டார். பீச்சுக்கு வராத மொத்த கூட்டமும் அங்கதான் ஓசில ஏசி காத்து வாங்குறாங்க. ஸோ மை ப்ரபெரண்ஸ் ஆல்ஸோ பிக் பஸார். ஓசில சைட் அடிக்குறதுக்கு ப்ரபெரண்ஸ் வேறயானு கேக்காதீங்கப்பு இங்கன எம்.ஜி. ரோடு, ப்ரிகேட் ரோட் இல்லை ஒரு ஸ்பென்சர் ப்ளாசா ம்கூம்... எதுவும் இல்லை. நோ அதர் சாய்ஸ்.

அடுத்த் பாகம் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க.