சினிமா சினிமா
Posted On Saturday, October 18, 2008 at at 7:22 PM by மங்களூர் சிவாமக்களே என்னைய யாரும் மறந்திடலையே??. குடும்பஸ்தன் ஆகீட்டேன் அதனால முன்ன மாதிரி அடிக்கடி மொக்கைபோட முடியலை அதுதான் லேட்டு.
தொடருக்கு அழைத்த மை ப்ரெண்ட் & ராப் -க்கு நன்றி.
1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
எங்க கிராமத்துல எதாவது விசேஷம்னா டெக், காசட் வாடகைக்கு எடுத்துகிட்டு வந்து படம் போடுவாங்க அப்படி பாத்ததுண்டு ஏழு அல்லது எட்டு வயசு இருக்கலாம். வீட்டுல ரொம்ப நேரம் பாக்க விடமாட்டாங்க ரொம்பா ஸ்ட்ரிக்ட்டு அதனால அந்த வயதில் முழுசா படம் பாத்ததா நினைவில்லை.
ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ராகவேந்திரா அப்படின்னு நினைக்கிறேன். பக்கத்து வீட்டுல இருக்கவங்க எல்லாம் சாமி படம் நல்லா இருக்குன்னு சொல்லி எங்க அம்மா கூட்டிகிட்டு போன முதல் & கடைசி படம் இதுதான்.
இ. என்ன உணர்ந்தீர்கள்?
இண்டெர்வல்ல சாப்பிட்ட பஜ்ஜியில காரம் அதிகம்னுதான்
:))
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
காதலில் விழுந்தேன். தங்கமணியுடன் பார்த்த முதல் திரைப்படம். இந்த படத்துக்கப்புறம் எந்த படத்துக்கு கூப்பிட்டாலும் வரதுக்கு ரொம்ப யோசிக்கிறா ஓவரா பாதிச்சிடிச்சி போல
:))
3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தலை ஜே.கெ.ரித்தீஸின் நாயகன் பாதி சரோஜா பாதி பார்த்தேன் டவுன்லோட் செய்து என்னத்த உணரறது கொட்டாவி கொட்டாவியா வந்தது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
சேது, அன்பே சிவம், முகவரி இன்னும் நிறைய இருக்கு மறந்து போச்சு.
5.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
பேர மாத்து ஊரை மாத்து அப்படின்னு இவங்க அடிக்கிற அரசியல் காமெடிகள், காவிரி - ஒகேனக்கல் பிரச்சனைக்கு நடிகர்கள் அடிக்கும் காமெடி ஸ்டண்ட்கள், நாலு படம் ஹிட்டாகறதுக்குள்ள அடுத்த சி.எம் நாந்தான்னு இவனுங்க செய்யும் அலப்பரைகள் சுவாரஸ்யமானவை மிகவும் பிடிக்கும்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும். (நன்றி ச்சின்ன பையன்).
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடனில், தமிழ்மணத்தில் வரும் சினிமா பற்றிய பதிவுகள் படிப்பதுண்டு.
7. தமிழ்ச்சினிமா இசை?
தமிழ் சினிமா பாடல்கள் மிகவும் பிடிக்கும் அதை சத்தமாக தெருவுக்கே கேட்கும்படி அலறவிட்டு கேட்பது எனக்கு சிறுவயதிலிருந்தே மிக மிக பிடிக்கும். சிறுவயதில் அதாவது ஒன்பதாவது பத்தாவது படிக்கும் காலத்தில் இதுக்காக பயங்கரமா திட்டெல்லாம் வாங்கியிருக்கேன் வீட்டுல.
8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
மங்களூர் வந்த புதிதில் கன்னடம் கற்பதற்காக ஏகப்பட்ட கன்னட படங்கள் பார்த்ததுண்டு இப்பல்லாம் அந்த தப்ப செய்யறதில்லை எத்தனை படத்ததான் தமிழ்ல பாத்துட்டு அதையே கன்னடத்துல பாக்குறது!?!? :)) , ஹிந்தி காலேஜ் படிக்கும்போது ரங்கீலாவில் ஆரம்பித்து ஏகப்பட்ட படம் பார்த்திருக்கிறேன் பார்த்து வருகிறேன். அப்புறம் ஆங்கிலப்படங்கள் & விஜய் டிவியில் வரும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கில படங்கள். சில கொரியன் படங்கள்.
8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?
பிடித்த படங்கள்னு சில சொல்லலாம் தாக்கிய படங்கள்னு சொல்றது அதிகம்தான். ஹிந்தில தில்வாலே, கபிகுஷிகபிகம், முன்னாபாய், லஹேரகஹோ முன்னாபாய், சர்கார், இன்னும் நிறைய.
ஆங்கில படங்களில் ஜேம்ஸ்பாண்ட் படம்லாம் தேடித்தேடி பார்த்ததுண்டு கேசினோ ராயல் வரை. அதைத்தவிர பேஸ் ஆஃப், ஜீமான்ஜூ, ப்ரூஸ்லி & ஜாக்கி சான் படங்கள், இன்னும் நிறைய கிடைக்கிற டிவிடி எல்லாம் பார்ப்பேன்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
விவேக் காமெடி ஒன்னு வரும் எனக்கு ஐ.ஜிய தெரியும் ஆனா அவருக்குதான் என்னைய தெரியாது அப்படின்னு அந்தமாதிரிதான், எனக்கு நயந்தாராவ தெரியும் ............. சினிமா உலகுக்கும் நமக்கும் அம்புட்டுதான் சம்பந்தம்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒகேனக்கல், காவேரி, அடுத்த சி.எம் , பி. எம்னு எந்த காமெடிக்கும் குறைவில்லாம ஜேஜேன்னு எப்பவும் போல இருக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நான் பெரும்பாலான சமயம் பார்ப்பது செய்தி சேனல்கள். சன் மியூசிக் பார்ப்பதுண்டு அதில் பழையபாடல்களே திரும்ப திரும்ப வரும் அதனால் எனக்கு ஒன்னும் பெரிய பாதிப்பா இருக்காது.
நம் மக்கள் சோறே இல்லைன்னாலும் இருந்திடுவாங்க சினிமா இல்லாம இருக்க மாட்டார்கள். குருவி தாங்கமுடியலைன்னாலும் திட்டிட்டு போய் குசேலன் பார்ப்பார்கள் அதையும் தாங்கமுடியலைன்னாலும் அப்போதைக்கு திட்டிட்டு அடுத்து எந்த அட்டுப்படம் வந்தாலும் பார்ப்பவர்கள் ஆச்சே :))
இந்த தொடரை தொடர அழைப்பது
யார் யார் விருப்பம் இருக்கோ அவங்க எல்லாம் எழுதுங்க ஆப்பீஸர்ஸ்.
சிவாஜி வாயிலே ஜில்ல்ல்லேப்பி
Posted On Monday, June 9, 2008 at at 7:51 PM by மங்களூர் சிவாபதிவுகளில் தொடர் விளையாட்டை யாரு முதலில் ஆரம்பிச்சதுன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். அவங்களுக்கு நிறைய மரியாதைகள் செய்யத்தான் கேக்குறேன்.
சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம்...........!!!
இது யாருன்னு அப்புறமா சொல்லுறேன்.
ஏதோ ஒரு ஆர்வ கோளாறுல ப்ளாக் ஆரம்பிச்சேனே தவிர என்ன எழுதுறதுன்னு தெரியாம முழி பிதுங்கி ஜனகராஜ் கணக்கா நிக்கிறேன். இதுல என்னடானா சிவாஜி வாயில ஜிலேபி ன்னு தொடர் பதிவுல எழுத தமிழ் பிரியன் கூப்பிட்டு இருக்கார். ஜி டாக்ல கூப்பிட்டு திட்டலாம்னு பார்த்தா தல(என்ன கொடும இது நான் அவருக்கு தலயாம்) உங்கள விட்டா எனக்கு யாரையுமே தெரியாது(நம்பிட்டோம் நம்பிட்டோம்). நீங்க எதையாவது எழுதுங்கன்னு சொல்லுறார்.
தலை கீழ நின்னு கூட யோசிச்சி பார்த்தேன். ஒண்ணுமே புரியல. சரி இந்த விளையாட்டை ஆரம்பிச்சி வச்ச ஜீவ்ஸ் கிட்டயே ஐடியா கேக்கலாம்னு போன் பண்ணினேன். என்மேல எவ்ளோ நாள் கோவம்னு தெரியல நான் மங்களூர் சிவா பேசுறேன்னு சொன்னவுடனே நீ எப்ப ஊருக்கு வருவ சொல்லு உனக்கு அப்ப வைக்கிறேன் ஆப்புன்னு காச் மூச்ன்னு கத்த ஆரம்பிச்சிட்டார்.
ஒருவழியா அவர கூல் பண்ணி(அவர் கேமராவுக்கு நல்ல லென்சு வாங்கி தர்றேன்னு சொல்லித்தான்) 'சிவாஜி வாயில ஜிலேபி' பத்தி ஒரு மொக்க பதிவு போடலாம்னு இருக்கேன். மொக்கைன்னா என்னன்னே தெரியல. அது என்னன்னு மட்டும் சொல்லுங்கன்னு கேட்டேன். யோவ் யாருகிட்ட வந்து என்ன கேக்குற. நானெல்லாம் பின்நவீனத்துவவாதியா மாறிட்டேன்னார். சரி அந்த கருமமும் தான் என்னன்னே தெரியல. அதையாவது சொல்லுங்கன்னு கெஞ்சி கேட்டேன். அவரு சொன்னத நீங்களே படிங்க. .
"அகராதியில் இருக்கும் புது வார்த்தைகளைத்தேடியெடுத்து, ஒருவரியில் சொல்லக் கூடியதை ஒரு பத்தியாகச் சொல்லி, சொல்லுவதைப் புரிந்தும் புரியாதவகையில் இருத்தி, சிலநேரம் படிப்பவர் முகம் சுளித்தாலும் பரவாயில்லை என்று எழுதி எழுதி முடித்தவுடன் ஆஹா நாம் எழுதியது நமக்கே புரிந்தும் புரியாமல் இருக்கிறதே என்ற எண்ணம் எழுந்தால் அது பின்நவீனத்துவம்என்று சொல்லப்படுகிறது"
ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சி. சரி ஒரு எக்ஸ்சாம்பிள் சொல்லுங்கன்னு கேட்டேன். அதுக்கு அவரு "ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கருப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது".......ன்னு என்னென்னவோ சொல்லிகிட்டே இருந்தார்.
எனக்கு ஒரு மண்ணுமே புரியல. இதெல்லாம் உங்க சொந்த சரக்கு தானான்னு தேவை இல்லாம ஒரு கேள்விய கேட்டுட்டேன். அதுக்கு சொன்னார் பாருங்க...."சொந்தமென்று சொல்லிட நினைக்கையில் தூரத்தினின்று தார்க்குச்சியால் குத்தப்பட்டு இரணத்தின் வலியால் தன் முதலாளியைக் குத்திக் குதறநினைக்கும் மனோபவத்தினைக் கொண்டதோர் முரட்டுக் காளையின் சாயலில் ஒருவன் எதிர் நின்றென்னை முறைக்கிறான்"....ன்னு சொன்னார்.என்ன கொடுமைங்க இது?
என்னோட போதாத நேரம் உங்ககிட்ட மாட்டிகிட்டேன். போதும் இதோட விட்டுடுங்கன்னேன். சரி சரி நீ பதிவு போட தானே இவ்ளோ நேரம் என்கிட்டே பேசினேன்னு கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. என்னத்த சொல்லுறது?
சரி பதிவோட ஆரம்ப வரிக்கு பதில் நான் தான்னு சொல்லிவேற தெரியனுமாக்கும். பதிவை தொடர நான் சில பேர அழைக்கனுமே!
அந்த கொடுமைய நான் செய்ய விரும்பலை :(