என்ன கொடுமை இது ஆப்பீசர்ஸ்
Posted On Wednesday, April 2, 2008 at at 1:45 PM by மங்களூர் சிவாநடுவானில் இளம் பைலட்கள், "தண்ணி' போட்டு, "ரொமான்ஸ்' செய்து பயிற்சி விமானத்தை, ஏரியில் தலைக்குப்புற கவிழ்தனர்!
புனே அருகே பாரமதியில், விமானம் ஓட்ட பயிற்சி தரும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் பயிற்சி விமானம் ஒன்று, கடந்த 14ம் தேதி, ஏரியில் தலைக்குப்புற விழுந்து விட்டது.விமானத்தில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் பைலட் உயிருடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர்கள் பிழைத்துக் கொண்டனர்.
"நடுவானில் தொழில்நுட்ப கோளாறினால் விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது' என்று இரு பைலட்களும் கூறினர்.
முழு விசாரணைக்கு பின் "நடுவானில் விமானம் பறக்கும் போது, கடமை தவறிய நிலையில் இரு பைலட்களும் இருந்துள்ளனர்; விமானம் விபத்துக்குள்ளாக அவர்கள் தான் காரணம்' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "பயிற்சி விமானத்தில் பறந்து கொண்டிருந்த ஆண், பெண் பைலட் இருவரும் இருபது வயதுக்கு உட்பட்டவர்கள்; இருவரும் விமானி அறையில் மது குடித்துள்னர்; சிகரெட்டும் பிடித்துள்ளனர். அவர்கள் காதல் வயப்பட்டதால் தான் விமானம் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளது. விபத்துக்குள்ளாக இதுவே காரணம்' என்று தெரிவித்தனர்.
பயிற்சியின்போதே இப்பிடின்னா என்ன கொடுமை இது ஆப்பீசர்ஸ்!?!?!?
புதிய குடும்ப கட்டுப்பாட்டு முறை
Posted On Friday, March 28, 2008 at at 11:52 AM by மங்களூர் சிவாஆண்களுக்கான 'குடும்ப கட்டுப்பாடு' முறையில் ஐஐடி காரக்பூர் புதிய முறையை கண்டுபிடித்துள்ளது. இந்த முறையில் 60மி.கி ஊசி மருந்து மூலமாக செலுத்தப்படும் மருந்தின் மூலம் 10 வருடங்களுக்கு இதன் 'பவர்' இருக்குமாம்.
இதன் தயாரிப்பு செலவு 50 ரூபாய் வெளிசந்தைக்கு வரும்போது 200 ரூபாய் அளவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் கிடைக்குமாம்.இதன் பின் விளைவுகள் பற்றி எதும் விவரங்கள் தற்போது தெரிவிக்கப்படவில்லை. தற்போது இது பூனே மற்றும் கொல்கத்தாவில் க்ளினிகல் ட்ரயலில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் முழுமையான சோதனை விவரங்கள் IndAc 2008 ல் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதை பற்றிய விரிவான சுட்டி