Showing posts with label பாட்டு. Show all posts
Showing posts with label பாட்டு. Show all posts

முதல் மழை

Mudhal Mazhai - R. Prasanna, Hariharan, Mahath

முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்றாய் இடம் என்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்


முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா

முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

Posted in Labels: |

வேறு என்ன வேண்டும் உலகத்திலே...



அக்கம் பக்கம்
யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்

அந்தி பகல்
உன் அருகே
நான் வாழ வேண்டும்

என் ஆசை எல்லாம்
உன் இருக்கத்திலே
என் ஆயுள் வரை
உன் அணைப்பினிலே

வேறென்ன வேண்டும்
உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

(அக்கம் பக்கம்)

நீ பேசும் வார்த்தைகள்
சேகரித்து
செய்வேன் அன்பே
ஒரு அகராதி

நீ தூங்கும் நேரத்தில்
தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன்
தலை கோதி

காதோரத்தில்
எப்போதுமே
உன் மூச்சு காற்றின்
வெப்பம் சுமப்பேன்

கையோடுதான்
கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில்
முகம் புதைப்பேன்

(வேறு என்ன வேண்டும்)
(அக்கம் பக்கம்)

நீயும் நானும்
சேரும் முன்னே
நிழல் ரெண்டும்
ஒன்று கலக்கிறதே

நேரம் காலம்
தெரியாமல்
நெஞ்சம் இன்று
விண்ணில் மிதக்கிறதே

(வேறு என்ன வேண்டும்)
(அக்கம் பக்கம்)

Posted in Labels: |

ஒரு தேவதை வந்துவிட்டாள்




Oru_Thevathai.mp3 - Nee Varuvai Enna

ஒரு தேவதை வந்துவிட்டாள்
என்னை தேடியே
வண்ண மாலைகள் சூடவந்தாள்
தங்க தேரிலே

(ஒரு தேவதை)

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப்போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க

(ஒரு தேவதை)

பூக்கும் செடியை எல்லாம்
சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்

எட்டு திசையும் சேர்த்து
ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்

கண்ணுக்குள் கண்ணுக்குள்
உந்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்
உந்தன் சந்தம்

உள்ளத்தை உள்ளத்தை
அள்ளி தந்தேன்
உன்னிடம் உன்னிடம்
என்னை தந்தேன்

என்நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்

(ஒரு தேவதை)

ரோஜா செடிகள் நட்டு
உயிரை நீராய் விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்

வெட்கம் வீசும் ரோஜா
வெளியே வரும் நேரத்தில்
வெயிலுக்கு தடை விதிப்பேன்

அன்பே உன் பாதங்கள்
நோகுமென்று
அங்கங்கே பூவாலே
பாதை செய்வேன்

கண்ணே உன் வாசத்தில்
நானிருக்க
காற்றிடம் யோசனை
கேட்டு வைப்பேன்

என்நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்

(ஒரு தேவதை)

Posted in Labels: |

ரகசியமானது காதல்







ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல்
முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல்
மிக மிக
சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல்
கனமானது
சொல்லச் சொன்னாலும்
சொல்வதுமில்லை
மனம் ஆனது

சொல்லும் சொல்லை
தேடித்தேடி
யுகம் போனது
இந்த சோகம் தானே
காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தை போல
அது சுதந்திரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல - அது
ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

(ரகசியமானது)

கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே
காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தானே
பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும்
பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினை போல
மிக தொடுதலை புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப்போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

(ரகசியமானது)

Posted in Labels: |

செல்லமே செல்லம்















என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜுகுட்டி என் பூனைக்குட்டி

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாவுமாகி என்னுள் நின்றாயடியே

(செல்லமே)

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்

டெல் மி நெள டெல் மி நெள
டெல் மி டெல் மி டெல் மி நெள

(செல்லமே)

சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்

நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்

நீ என்பதும் அடி
நான் என்பதும் இனி
நாமாகி போகின்ற நேரம்

தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தீயா தர்ஷினி

(செல்லமே)

என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜுகுட்டி என் பூனைக்குட்டி

காலை சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைபிடிப்பேன்

நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைந்திடுமே

வானாகிறாய் காற்று வெளியாகிறாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே

தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தீயா தர்ஷினி

(செல்லமே)
(செல்லமே)

Posted in Labels: |

நீ காற்று நான் மரம்




நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீயலை நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்

(நீ காற்று)

Posted in Labels: |

விழிகளில் விழிகளில்






விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரைக்கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வலிதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

விழிகளில்.......



சாலையில் நீ போகையிலே
மரம் எல்லாம் கூடி முனுமுனுக்கும்
மாலையில் உனை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி
ஒரு கார்பன் தாள் என
கண்ணை வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே

விழிகளில்.......


பூவிலே செய்த சிலை அல்லவா
பூமியே உனக்கு விலை அல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா

மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் குளித்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி

இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண் தோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே

எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரைக்கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே

ஒரு நாள் வலிதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

படம் : திருவிளையாடல் ஆரம்பம்

Posted in Labels: |