Showing posts with label குருவி. Show all posts
Showing posts with label குருவி. Show all posts

தேன் தேன் தேன் உனைத்தேடி அலைந்தேன்












தேன் தேன் தேன்
உனைத்தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
எனை நானும் மறந்தேன்
உனைக் காண பயந்தேன்
கரைந்தேன்

என்னவோ
சொல்லத் துணிந்தேன்
ஏதெதோ
செய்யத் துணிந்தேன்
உன்னோடு சேரத்தானே
நானும் அலைந்தேன்

(தேன்)

அள்ள வரும் கையை ரசித்தேன்
ஆள வரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
ஏதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்

(தேன்)

சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கவனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
ஏன் உன்னை திருடத்தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் தூசும் பெண்மை அறிந்தேன்
நீ நடமாடும் திராட்சை தோட்டம்
எதிரில் அறிந்தேன்

(தேன்)
(தேன்)


Posted in Labels: |