கால ஓட்டத்தில் காணாமல் போனது...

கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன். அப்படின்னு சுரேகா கூப்பிட்டிருக்காரு.
தலைவர் சொல்லி கேக்காம இருக்க முடியுமா!! :)

இதோ என் பதிவு.

சைக்கிள் :

அப்பிடியே ஒரு 12 வருசம் பின்னோக்கி போங்க 96களில் நான் சென்னையில் இருந்த காலம் எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிள்தான். அப்போது நான் மடிப்பாக்கத்தில் தங்கி இருந்தேன். வேலை பார்த்தது கோட்டூர்புரத்தில் ஏறக்குறைய பத்திலிருந்து பணிரெண்டு கிலோமீட்டர் இருக்கும். வேளச்சேரி தரமணி டைடல்பார்க் மத்திய கைலாஷ் வழியா கோட்டூர்புரம் செல்வேன். அங்கு வேலை முடிந்ததும் அங்கிருந்து நுங்கம்பாக்கம் வீட் க்ராப்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்திற்கு , கம்ப்யூட்டர் படிக்க போவேன் மாலை 6.30ல் இருந்து 8.00 மணி வரை கம்ப்யூட்டர் வகுப்பு. வேலை முடிந்து நுங்கம்பாக்கம் செல்லும்போது கஷ்டம்லாம் ஒன்றும் தெரியாது ரொம்ப ஜாலியாதான் இருக்கும் கலர்ஃபுல்லான டைம் வேறு :) . ஆனால் கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்ததும் N0n stop நுங்கம்பாக்கம்-ல் இருந்து மடிப்பாக்கம் வரை சைக்கிள் மிதிக்கணும் ரூட் எல்லாம் சரியாக நினைவில்லை மறந்து போச்சு. குறைஞ்சது இருவது கிலோமீட்டராவது இருக்கும். இன்னைக்கு நினைத்துக்கூட என்னால பார்க்க முடியாது. மோட்டார் சைக்கிளில் செல்வதற்கே டயர்டா இருக்குன்னு யோசிக்கிற ஆளா மாறிப்போயிட்டேன், ஆனா அந்த காலத்தில் சைக்கிளில் போய் வந்திருக்கிறேன். அதுவும் மதியத்துக்கு வீட்டுல இருந்து கட்டி எடுத்துகிட்டு போற டிபன்பாக்ஸ் சாப்பாடு அவ்ளோதான் அந்த காலத்துல எல்லாம் நினைச்ச நேரத்துக்கு நினைச்சதை வாங்கி சாப்பிடற அளவு சம்பளமும் கிடையாது.

போன் டைரி:

அதே 96களில் சென்னையில் இருந்தது ஸ்கைசெல் மற்றும் ஆர்பிஜி இரண்டு செல்போன் சேவைகள் மட்டுமே இன்றைக்கு மாதிரி குப்பை பெறுக்குகிறவன், தள்ளுவண்டிகாரனிடமெல்லாம் செல்போன் பார்க்க முடியாத காலம் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் எல்லாம் மிக அதிகமான விலையில். எனக்கு தெரிந்த எல்லாரிடமும் ஒரு பாக்கெட் டைரி வைத்திருப்பார்கள் தொலைபேசி எண்களை குறித்துக்கொள்ள குறைந்தது ஒரு 25 -5 0 எண்கள் மனப்பாடமாகவும் தெரிந்து வைத்திருப்பார்கள். இன்று பெரும்பாலோரிடமிருந்து அந்த டைரி மறைந்துவிட்டது. எல்லாம் செல்போனிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்கிறார்கள். அது போல 4,5 எண்களுக்கு மேல் போனை பார்க்காமல் சொல்லவும் திணறும் நிலையாகிவிட்டது. போன் தொலைந்தால் அவ்வளவுதான்.

சிறுவயது தைரியம்:

சிறு வயதுல கிராமத்துல பிறந்து பள்ளி படிப்பு முழுவதும் அந்த கிராமத்திலேயே கிராமத்துல என்ன பொழுது போக்கு இருக்கமுடியும் சொல்லுங்க பசங்க எல்லாம் சேர்ந்து கிணத்துக்கு குளிக்க போவோம் அப்படி கத்துகிட்டதுதான் நீச்சல். கிணத்துல அப்போதெல்லாம் மோட்டார் வைத்து நீர் இறைப்பது குறைவுதான் மாடுகட்டி ஏற்றம் இறைப்பார்கள் மாடு பின்னால் வரும்போது ஒரு ரப்பரால் ஆன பை கிணற்றுக்குள் போய் தண்ணீரை அதில் சேமித்துக்கொள்ளும் முன்னால் போகும்போது அந்த ரப்பர் பை மேலே வந்து அதற்காக ஏற்படுத்த பட்டுள்ள கால்வாயில் பாய்ந்து தொட்டியிலோ நிலத்திலோ பாய்ச்சுவார்கள் அதற்கு கவலை இறைக்கிறது (ஏற்றம் இறைக்கிறது) என்று சொல்லுவார்கள் அந்த திட்டின் மேல நின்று கிணத்துக்குள் போட்டி போட்டுக்கொண்டு குதிப்போம் கீழ மண் இருக்கா கல் இருக்கா பாறை இருக்கா தண்ணி எவ்வளவு ஆழம் இருக்கு ஒன்னும் தெரியாது சில நாட்கள் தண்ணீர் பாம்புடன் கட்டி புரண்டதும் உண்டு ஆனால் மனதில் பயம் இருந்ததில்லை ஆனால் இன்னைக்கு சில நாட்கள் இங்க மங்களூரில் நீச்சல்குளத்திற்கு போவதுண்டு அழகா எழுதி வைச்சிருப்பான் 25 அடி ஆழம் இருக்கிறது என கீழ எந்த கல்லு பாறை எதும் இல்லைங்கிறது நல்லா தெரியும் இருந்தாலும் மேல இருந்து குதிக்கறப்ப கொஞ்சம் உதறல் இருக்கத்தான் செய்யுது!! காணாமல் போனது அந்த 'சிறுவயது தைரியம்'.


எழுத நான் அழைப்பது 2 பேரை: (யாரை கோத்து விடலாம்!?!?)

1. ஜாக்கி சேகர்
2. காஞ்சனா ராதாகிருஷ்ணன்.