வாட் எவர் ஹாப்பன்ஸ் லைஃப் ஹாஸ் டு கோ ஆன்

தலைப்பிற்கான காரணம் / அர்த்தம் அதிகம் பேருக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். புரியாதவர்களுக்கு பதிவில்.

போன வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் நானும் மனைவியும் கூர்க் சென்றிருந்தோம். க்ளைமேட் மிகவும் அருமையாக இருக்கிறது. நண்பர்களுக்காக சில போட்டோக்கள் மட்டும் ஆர்குட்டில் இணைத்திருக்கிறேன்.

பகல் கொள்ளை - பகல் கொள்ளை அப்படி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அது என்ன என்று தெரியவேண்டும் என்றால் ஒருமுறை க்ளப் மகிந்த்ரா ரிஸார்ட்டில் தங்கி வரவும்.

பல விமர்சனங்களை படித்த பின்பும் கடந்த செவ்வாய்கிழமை வாரணம் ஆயிரம் படம் போய் பார்த்தோம். இருட்டாக மிலிடரி சீன் வரும் போதெல்லாம் (மணிரத்னம் பட எஃபக்ட்) காதலில் விழுந்தேன் படம் கழுத்தை அறுத்ததை போல் ஆகிவிடக்கூடாதே என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது.

சில பதிவர்கள் பயமுறுத்திய அளவு படம் மோசமாக இல்லை. படம் நன்றாகவே இருந்தது. படத்தில் ஆங்கில, இந்தி கலப்பு மிக மிக அதிகம். சமீரா ரெட்டிக்கு மேக்கப் நன்றாக இருக்கிறது பளிச் என இருக்கிறார், அப்படியே ரம்யாவுக்கும் மேக்கப் கொஞ்சம் போட்டிருக்கலாம். சமீரா ரெட்டிக்கு பதில் நயந்தாராவே போட்டிருக்கலாம் என மனைவியிடம் சொன்னதுக்கு தின்பதற்கு கொடுத்த இரண்டு பிஸ்கட்களையும் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டுவிட்டாள் :((

சூர்யா மிகவும் மெனக்கெட்டு மிகப்பிரமாதமாக செய்திருக்கிறார் குறிப்பாக பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் கணாகாணும் காலங்கள் பார்ப்பது போன்ற எஃபக்ட்.

ட்ரெய்னில் சமீராவை பார்த்ததும் சூர்யா செய்யும் குறும்புகள் மிக இனிமை.

மற்றபடி படத்தின் தலைப்பிற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.


பதிவின் தலைப்பு படத்தில் வரும் டயலாக்.
* * * * * * * * * * *

நாளொரு சட்னியும் தினமும் அதே இட்லியுமாக வாழ்க்கை இனிமையாக போய்க்கொண்டிருக்கிறது. (பதிவின் தலைப்பிற்கும் இட்லிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எங்கு வேணும்னாலும் துண்டு போட்டு தாண்ட தயார்)

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

பை

Posted in |