குடும்பத்துடன் பார்க்கும்படியான சினிமா

சுப்ரமணியபுரம் பார்த்தேன்... ம்.. நல்லா இருந்தது. நல்லபடம்ன்னா இப்ப கற்றது தமிழ், பருத்திவீரன் , சுப்ரமணியபுரம்ன்னு ஹிட் ஆகற எல்லாத்துலயும் ரத்தம் ரத்தம். மனசை தைரியமாக்கிட்டுத்தான் படம் பார்க்கனும்.

இந்த இயக்குனர்கள், திறமை இருக்கு நல்ல எடுக்கறாங்க, ஆனா கொஞ்சம் ரத்தம் குறைச்சு ஏ சர்டிபிகேட் வராம, குடும்பமா குழந்தைகளோடு பார்க்க அழகா நாலுபடம் செய்தா ... நல்லாருக்குமில்ல....இப்ப குழந்தைகள் இந்த படத்தைப் பார்க்கலயான்னா , பார்க்கிறாங்க ஆனா நல்லது இல்லை . அப்படின்னு முத்துலட்சுமியக்கா அவங்க பதிவுல சொல்லியிருந்தாங்க,

நானும் என் மருமவன் பேபி பவனுக்கு போன் போட்டு ஸ்கூல்ல யாராச்சும் உன்னைய ஏமாத்திட்டாங்கன்னா என்னாடா கண்ணா பண்ணுவ அப்படின்னு கேட்டேன் கடிச்சி வச்சிருவேன் மாமா ரத்தம் வர மாதிரி அப்படின்னான் ஏண்டாப்பா உனக்கு இப்பவே இந்த கொல வெறி அப்படின்னு நினைச்சிகிட்டு இல்ல கண்ணா அப்பிடி எல்லாம் செய்யக்கூடாது அப்படின்னு ஒரு வழியா சொல்லிட்டு,

நம்ம வருங்கால கவுஜாயினி என் மருமவ நிலா பாப்பாவுக்கு போன் போட்டேன் யாராவது உன் பென்சில் பேனா பல்பம் எதாச்சும் எடுத்துகிட்டு ஏமாத்தினாங்கனா என்ன செல்லம் பண்ணுவ அப்படின்னு கேட்டேன் அதுக்கு சொன்னா காம்பஸாலயே குத்திருவேன் மாமா அப்படின்னு எனக்கு 'பக்'னு ஆகீடுச்சு.

நெக்ஸ்ட்டு யார்கிட்ட கேக்கலாம் ஆங் நம்ம காமிரா கவிஞர் பொண்ணு அதுவும் எனக்கு மருமவதான் ஆகணும் சரின்னு ஜெயச்சிரி பாப்பாவுக்கு போன் போட்டா அது சொன்னிச்சி
தொடைலயே நறுக்குனு கிள்ளிடலாம் இல்லைனா
கா விட்டுடலாம் இல்லைனா
மண்டைலயே கொட்டிடலாம் இல்லைனா
மிஸ்ஸுகிட்ட சொல்லிடலாம் இல்லைனா
அவன் புஸ்தகத்தை எடுத்து கிழிச்சி வெச்சிடலாம் இல்லைனா
அவன் வாட்டர் பாட்டில கீழ கொட்டிடலாம்
மாமா இன்னும் இருக்கு கேளுங்க மாமா ................

அப்படின்னு அடுக்கிகிட்டே போனாளா ஆஹா சினிமா படம் எடுக்கிறவங்களா நல்லா கவனிச்சிக்கங்கப்பா குழந்தைங்களோட படம் பாக்கணும்னா எப்படி எடுக்கணும்னு

நன்றி : குசும்பன்

Posted in Labels: |