நீ

பிறவிக்கு உய்வுத் தந்த உறவு நீ
பிரிவில் தொய்வுத் தந்த நிலவு நீ..

வாழ்வியக்கும் கருவி நீ-பாசத்தை
வெளிப்படுத்தாக் கருமி நீ..

மின்னொளி விழியில்
மகிழ்விப்பது நீ..
மின்சார பார்வையில்
மரணம் தருவதும் நீ..

கண் நிறைந்த காட்சி நீ..
கொண்ட வாழ்வின் மாட்சி நீ..

ஆக
என் அணைத்துமாய் நீ..
ஆனால்
என்றும் நீயாக நீ...!


சுட்ட இடம் : ஆர்குட்

Posted in Labels: , |