விழிகளில் விழிகளில்






விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரைக்கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வலிதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

விழிகளில்.......



சாலையில் நீ போகையிலே
மரம் எல்லாம் கூடி முனுமுனுக்கும்
மாலையில் உனை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி
ஒரு கார்பன் தாள் என
கண்ணை வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே

விழிகளில்.......


பூவிலே செய்த சிலை அல்லவா
பூமியே உனக்கு விலை அல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா

மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் குளித்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி

இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண் தோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே

எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரைக்கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே

ஒரு நாள் வலிதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

படம் : திருவிளையாடல் ஆரம்பம்

Posted in Labels: |