பயணக்குறிப்புகள் ஏப்ரல் 15,2008

எத்தனை மணிக்கு ட்ரெயின் அங்க எந்த கம்பார்ட்மெண்ட் அது இதுன்னு கரூர் வரதுக்கு முன்னாடியே இளைய கவியிடம் 4 தடவை சஞ்சய்யோட செல்லில் இருந்து நாங்களும் சஞ்சய் செல்லுக்கு அவரும் பேசியிருந்தோம் இருந்தும்!!!!.

அதிகாலை 3 மணி அளவில் கரூர்ல நண்பர் இளையகவி வந்து ஜாயின் பண்ணிகிட்டார். சின்ன விளையாட்டு விளையாடுவொம்னு தோணிச்சி. நாந்தான் இறங்கி அவரை எங்க 'பெர்த்'க்கு கூட்டிகிட்டு வந்தேன். கூட்டிகிட்டு வந்து இவர்தான் 'கோவி கண்ணன்' அப்படின்னு சஞ்சய்யையும் இவர்தான் 'நாமக்கல் சிபி'ன்னு இம்சையையும் அறிமுகப்படுத்தி வெச்சேன்.

இளைய கவி ஆனாலும் அனியாயத்துக்கு அப்பாவியா இருக்க !!!!
ஆப்பு எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நீ ரொம்ப நல்லவன்யா!!!

இ.கவி :கண்ணன் சார் நீங்க சிங்கப்பூர்ல இல்ல இருக்கீங்க இங்க எப்பிடி?
போலி கோவி கண்ணன் : இப்பதாங்க சென்னைக்கு ப்ளைட்ல வந்தேன் நம்ம மக்கள் குசும்பன் கல்யாணம்னு அப்பிடியே பிடிச்சி போட்டுகிட்டு வந்துட்டாங்க!!!!

இ.கவி: சித்தப்பு நாம சாட் பண்ணமே அதை பத்தி இதை பத்தி
போலி சிபி : ஆமா பண்ணம்ல !!!

இப்பிடியாக பலப்பல விசயங்கள் பேசிகிட்டிருக்கும் போதே கீழ இருந்து ரெண்டு பேர் பரிதாபமா சார் பிலிஸ் பிலிஸ் கொஞ்சம் தயவு செய்யுங்க நாங்க கொஞ்சம் தூங்கணும்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க!!

கரூர் வரதுக்கு முன்னாடி 1.30 மணி அளவில் ஒரு 'பாப்பா' லைட்ட போட்டுகிட்டு படிக்கிற மாதிரி சீன் பண்ணிகிட்டிருந்துச்சு. எங்க சவுண்ட் அலப்பறைல அது லைட்ட ஆப் செஞ்சிட்டு கவுந்து படுத்துருச்சி.

பதிவர் பட்டறை , பின், முன் , நடு நவீனத்துவம் மற்றும் பலப்பல விசயங்கள் அலசி தொவைச்சி தொங்கவிடப்பட்டதால் அது எல்லாம் 'சென்சார்டு'.

ஒரு வழியா காலை நாலரை நாலே முக்காலுக்கு படுத்தோம் ஏழு மணிக்கு சரியாக மயிலாடுதுறை வந்தாச்சு.

Posted in Labels: |