TAG

அனைவருக்கும் கொஞ்சம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்னுடைய இன்னொரு வலைப்பூவில் நூறாவது பதிவு மற்றும் புத்தாண்டு பதிவு எல்லாம் போட்டு கொண்டாடிட்டு இங்க வர கொஞ்சம் லேட்டாயிடிச்சு.

இப்பெல்லாம் ஆபீஸ்லயும் சரி ஆபீஸ்க்கு வெளியிலயும் சரி நாலுபேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே ஸ்டாக் மார்க்கெட் பத்திதான் இப்ப நடந்துகிட்டிருக்கிறது ‘செகுலர் புல்’லாம் எப்பாடா என்னாமா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா!! பங்கு சந்தை குறியீட்டு எண் இன்னும் மூணு – நாலு வருசத்துக்கு இப்பிடியே ஏறுமுகமா இருக்குமாம் நடு நடுவே சின்ன சின்ன சரிவுகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி.

யாரப்பாத்தாலும் அதை வாங்கினியா இதை வாங்கினியா இந்த ஸ்டாக் அடுத்த வாரம் பார் பறக்க போகுது. ஒருத்தர் ஒரு பங்கை ரெக்கமண்ட் சொல்லி நாம வாங்காம தப்பி தவறி அது மேல போகுதுன்னு வைங்க உடனே அதான் நாங்க அப்பவே சொன்னம்ல. எனக்கு இந்த விளையாட்டிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

எனக்கு ஒரு ‘நல்ல’ கம்பெனி பங்கு வாங்கனும்னு தோணினா அத கவனிச்சு விலை குறையும்போது ஒரு சிறு அளவு வாங்கி அதன்பிறகும் விலைகுறைந்தால் திரும்பவும் ஒரு சிறு அளவு வாங்கி சேர்த்து வைத்து மூன்று மாதமானாலும் சரி ஆறு மாதமானாலும் சரி கழுதை பிக்ஸட் டெபாசிட் போட்டா வெயிட் பண்றதில்லையா கெடந்துட்டு போகட்டுமே அப்படிங்கிற இது என்ன ஊசிப்போகிற பொருளா!? இந்த அடிப்படையில தான் நான் பங்கு வர்த்தகம் செஞ்சுகிட்டு வரேன்.

என் ப்ரெண்ட்ஸ் சில சமயம் கிண்டல் செய்வதும் உண்டு அதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன் சில நாட்கள் முன் என் நண்பர் ஒருவரை சந்திச்சப்ப நலமெல்லாம் விசாரிச்சு டீ எல்லாம் சாப்பிட்டதுக்கப்புறம் எப்பிடி போயிட்டிருக்கு உன்னோட ஷேர் அப்படின்னு பேச்சு திருப்பிச்சு இல்லடா எல்லாம் விட்டுட்டேன் அந்த பக்கமே போகறதில்ல ஒரு நாலரை லட்சரூவா நஷ்டம் ‘எப் & ஓ’ ல அப்படின்னார். எனக்கு ‘எப் & ஓ’ பற்றி ஒரு எல்.கே.ஜி மாணவனுக்கு அறிவு எவ்வளவோ அவ்வளவுதான் அதை பற்றி இத்தனைக்கும் என்னுடைய ‘ப்ரோகரேஜ் ஹவுஸ்’ இலவசமா பாடம் எல்லாம் நடத்துனாங்க அதுக்கப்புறமும், அதனால் அந்த பக்கமே தலை வெச்சு படுக்காம இருந்தேன். இவன் எப்ப அந்த பக்கம் போனான் ஏன் இப்படி ஆச்சு ஒண்ணும் புரியலை ஆனா ரொம்ப வருத்தமா ஆயிடிச்சு.

அதுபோல இந்த கம்மோடிடிஸ் , டெரிவேடிஸ் டிரேடிங்கும் ஒண்ணும் பிடிபடமாட்டிங்கிது உளுந்து, சோயா, தங்கம், வெள்ளி, நிக்கல் எல்லாம் எதையுமே டெலிவரி எடுக்காமலே வாங்கி வாங்கி விக்கலாமாம் மார்ஜின்ல. நான் கிராமத்துல வளந்தவன்கிறதுனால உளுந்து செடிய பாத்திருக்கேன், இட்லி தோசைக்கு பயன்படுத்துவாங்க இதுதான் உளுந்து பத்தி அதிகபட்சம் எனக்கு தெரிஞ்சது.

டெரிவேடிஸ்ங்கிறது கரன்சி ட்ரேடிங்காம் தெனைக்கும் மாறுபடற கரன்சி விலை வித்தியாசத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாமாம். ஒருவேளை இதை மட்டுமே தொழிலா செய்ய ஆரம்பிக்கும்போது பாத்துக்கலாம்னு இந்த பக்கமும் இன்னும் போகலை.

நேத்து அதாவது 4-1-08 வெள்ளிக்கிழமை என் செல்போன் அரைமணிக்கொருதரம் கொய்ங், கொய்ங், கொய்ங்னு எஸ்.எம்.எஸ்ஸா வந்திட்டிருக்கு என்னன்னு பாத்தா www.towerteammumbai.com னு ஒரு சர்வீஸ்ல இருந்து ஏழு நாள் ஃப்ரீ டரையலாம் அன்பு நண்பர்கள் யாரோ அவங்களுக்கு ரெஜிஸ்டர் பண்றப்ப இலவசம்தானே எங்க அண்ணனுக்கும் அனுப்புன்னு என் நம்பரையும் போட்டு விட்டுட்டாங்க போல.

ஒரு காலத்துல பங்குசந்தைல பயந்து பயந்து கால் வெச்ச சமயம் நாம பாட்டுக்கு எதாவது ஒரு கம்பெணி ஷேரை வாங்கி அது ஏடாகூடமாயிடிச்சினா என்ன பண்றதுன்னு ஆறு மாசத்துக்கு இரண்டாயிரம் ரூவா பணம் கட்டி ‘பவர் யுவர் ட்ரேட்’ டாட் காம்’ல சேர்ந்து சோரம் போனவங்க நாம!! இப்பல்லாம் திகட்ட திகட்ட டிப்ஸ் இலவசமாவே கிடைக்குது மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ டைரக்ட், ஆர் மணி,
பங்குவணிகம் ; சுதாகர் வலைப்பூ இதெல்லாம் இல்லாம எந்த ப்ரெண்டை மீட் பண்ணாலும் டிப்ஸ்.

கூட்டி கழிச்சி பாத்தா சில நண்பர்கள் இந்த ‘எப் & ஓ’ அது இதுன்னு விழுந்து பெரண்டு செய்யற லாபத்தைவிட ஒண்ணுமே செய்யாம ப்ளாக் எழுதிகிட்டு கமெண்ட் போட்டுகிட்டு ஜாலியா என்ஞாய் பண்ணிகிட்டிருக்க நான் எந்த விதத்திலும் % கொறைஞ்சே போயிடலை இன்னும் சொல்ல போனா என் சைடு கொஞ்சம் ஸேஃப்.

எல்லாம் சரி பிப்ரவரில இருந்து MF, FI எல்லாம் ஷார்ட் செல்லிங் அனுமதிக்கலாம்னு செபி முடிவு பண்ணியிருக்காம். எப்பிடியும் வருச கடைசிக்குள்ள சென்செக்ஸ் இருபத்திஐயாயிரம் பாயிண்ட் தாண்டீடுமாம். இது நான் உங்களுக்கு சொல்ற ஹாட் டிப்ஸ் இல்ல ஆறிப்போன டிப்ஸ்தான் இது.


நம்ம ரசிகன் என்னைய TAG பண்ணி மாமு எதாவது மொக்க போட்டு 4 பேர TAG பண்ணுன்னு சொல்லீட்டார் நானும் சரிய்யான்னு நாக்கு ச்ச வாக்கு குடுத்துட்டேன் அதுக்காக தனியா ஒரு மொக்க போடனுமா இன்னைக்கு இன்னொரு வலைப்பூக்கு எழுதினதையே காபி பேஷ்ட் பண்ணீட்டேன்.

இந்த மொக்கை TAG க்கு ரூல்ஸ் ரெகுலேஷன் இங்க போட்டா பதிவு தாங்காது அம்மாம் பெரிசாயிரும் அதனால ரசிகனோட இந்த பதிவுல பாத்துக்கங்க!!

நான் அழைக்கும் நண்பர்கள்

1. தென்றல்
2. சிவப்ரகாசம்
3. ராதாகிருஷ்ணன்
4. சுதாகர்

Posted in Labels: |