TAG by இம்சை

வீக் எண்ட் பதிவுகள் ஒரு விளக்கம்

வீக் எண்ட் பதிவுகள் தவறா? சில நண்பர்கள் சொல்றாங்க இந்த வீக் எண்ட் பதிவெல்லாம் போட்டா பேர் கெட்டு போயிடும் போடாத அப்டின்னு சிலர் வியாழக்கிழமையே சாட்ல கேக்குறாங்க என்ன இந்த வார பதிவு ரெடியான்னு. என் வலைப்பூ என்ற முறையில் நான் தான் அதிகம் கவலைப்பட வேண்டும் இதை பற்றி நாளை என் நண்பர்களோ, உறவினர்களோ, சகோதரனோ, சகோதரியோ இதை பார்த்தால் என்னை பற்றி என்ன நினைக்க கூடும் என்று!

வேண்டாம் என நண்பர்கள் சொல்வதற்கான காரணம் சிறுவர்களும் வலைப்பதிவுகள் பார்க்கிறார்கள் என. வலையுலகம் அதாவது இணையம் என்பது வலைப்பூக்களை எல்லாம் தாண்டி மிகப்பெரியது. ஒரு இளைஞனோ, இளைஞியோ இந்த ‘கவர்ச்சி’ படங்களை அசிங்கம் அருவருப்பு என சொன்னால் என் தாழ்மையான கருத்து போய் ஒரு நல்ல டாக்டரா பாருங்கப்பு நாளை பின்ன பிரச்சனையாக போவுது.

சமீபத்தில ஷிமோகா என்ற இடத்திற்கு ஒரு வேலையாக போயிருந்தேன். அங்கு ஒரு விலங்குகள் சரணாலயம் இருக்கு. லயன் சபாரி எல்லாம் போயிட்டு மத்த இடத்தையும் சுத்தி பாத்துகிட்டு இருக்கப்ப மொபைல்ல வைப்ரேஷன் வெச்சா வருமே ஒரு சவுண்டு அதே மாதிரி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு பாத்தா நம்ம ஆண் மயிலார் தோகைய விரிச்சி பெண் மயிலாரை கவர் செய்ய சிக்னல் குடுத்துகிட்டிருக்கார். இது படைப்பின் ரகசியம்.

பவுடர் தேவை இல்லை, லிப்டிக் தேவை இல்லை, ஜீன்ஸ்தான் போடணும்னு இல்லை ‘அதை’ எடுப்பா காட்டணும் இடுப்பை காட்டணும் எதுவும் தேவை இல்லை. இன கவர்ச்சி, ஈர்ப்பு இயற்கையான ஒன்று. இது மட்டும் இல்லைனா இன்னும் அதிக பட்சம் ஒரு எழுவது எண்பது வருடங்களில் மனித இனமே இருக்காது.

என்ன மனித இனத்தை காக்க வந்த பெரிய பருப்பா நீன்னு கேக்காதீங்க புடிச்சா பாருங்க இல்லைனா, இல்லைனாலும் பாருங்க.

இம்சை என்னைய TAG பண்ணி ரொம்பா நாள் ஆச்சு நானும் பதிவு போடலை அதனால இந்த பதிவை இம்சை TAG க்காக கணக்குல எடுத்துக்கங்க.

இது இந்த வருடத்திற்கான மூன்றாவது TAG ஏற்கனவே இரண்டு பதிவெழுதி எட்டு பேரை பதிவெழுத கூப்பிட்டாச்சு திரும்ப நாலு பேரை கூப்பிட்டால் மங்களூர்க்கு ஆட்டோ வரும் அபாயம் அதிகரிப்பதால் நான் யாரையும் TAG செய்யவில்லை.


குறிப்புகள் :
1. இம்சை லேபிள் பார்க்கவும் இது சீரியஸ் பதிவு
2. அதனால் இதை அறிவியல் / நுட்பம் பகுதியில் வகைபடுத்தியுள்ளேன்

Posted in Labels: |