நஒக - நல்லவன்

என்னடா மச்சி அதுக்குள்ள கிளம்பிட்ட கொஞ்சம் நேரம் உக்காந்துட்டு போடா பேசிகிட்டிருக்கலாம். இல்லை கேண்டின் போய் ஒரு வடை, டீ சாப்பிட்டு தம் அடிச்சிட்டு வரலாம்.

இல்லடா மச்சி நான் போனும் வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. எல்லா வேலையும் முடிச்சிட்டேன் எதும் டவுட் அந்த மேனேஜர் கேட்டா கொஞ்சம் சமாளிச்சிடுறா ப்ளீஸ்

என்னாடா எப்பிடிடா இப்பிடி திடீர்னு நல்லவன் ஆயிடறீங்க நேரம் காலம் இல்லாம ஆபீஸ்ல உக்காந்து கிடப்பீங்க இப்பெல்லாம் டைத்துக்கு கிளம்பறீங்க!!

சரி போய் தொலை இதுக்கு மேல நான் எது சொன்னாலும் உன் காதுல ஏறப்போறது இல்லை.

இந்த பசங்களே இப்படித்தான்யா ஒருத்தனும் விதிவிலக்கில்லை. போன வாரம் வரைக்கும் நேரம் காலம் பாக்காம சுத்திகிட்டிருந்த பய இப்ப எல்லாம் 'டான்' னு மணி அடிக்க முன்னாடி கிளம்பறான். ஹும் பெருமூச்சு விட்டான் ரவி.

தண்ணியடிக்க போனால் இருவரும் நள்ளிரவு பணிரெண்டு ஒன்று என நேரம் காலம் தெரியாமல் திரிந்தவர்கள் சில நாட்கள் இருவரும் இவன் ப்ளாட்டிலேயே கூட படுத்துவிடுவார்கள்ள். இப்போது என்னடா என்றால் இன்னும் ஆறு மணிக்கு பதினைந்து நிமிடம் இருக்கு இவன் இப்படி அவசரப்படுகிறான் எல்லாம் தலையெழுத்து.

இதில் கொடுமை என்னன்னா பத்து வருசமா தம், தண்ணி அடிச்சிட்டிருக்க 'Dog' தம், தண்ணிய விட்டுட்டானாம்.

ஒரு வேளை நாமும் அப்படித்தான் ஆவோமா மனசுக்குள் நினைத்து பார்க்கும் போதே ச்சே நாமளா சான்ஸே இல்லை. இப்படித்தானே அவனும் சொன்னான் ஆனால் இன்னைக்கு இப்படி ஓடறானே.

எத்தனை பேரை பாத்திருக்கோம் ஆபீஸ்லயே, ஜாலியா சுத்திட்டிருக்கவன்லாம் மூலைல போய் உக்காந்து குசு குசுன்னு செல்போன் பேசறதென்ன தலைய தலைய ஆட்டறதென்ன.

எல்லாம் காலத்தின் கட்டாயமோ நினைக்கும் போதே கொஞ்சம் அருவருப்பாகவும் வந்தது. கல்யாணம் செய்ய சொல்லி தொந்தரவு செய்யும் அம்மாவுக்கு எதாவது காரணம் சொல்லி கொஞ்சம் 'டிலே' பன்னனும்.

பதினைந்து நாள் முன் திருமணமான கவிதா இன்னும் கம்ப்யூட்டரில் எதோ தேடிக்கொண்டிருந்தாள். ரிசப்ஷனில் இருந்த பூர்னியும் மெதுவாக கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். இந்த பொண்ணுங்களே பரவாயில்லை என நினைத்துக்கொண்டான்.

சரி கல்யாணம் ஆனவன்னா கூட பரவாயில்லை இவன் ஏன் ஓடறான் பக்கத்து வீட்டுல யாரோ ஒரு புது ஃபேமிலி குடி வந்திருக்காங்களாம் அந்த பொண்ணு இவன் போறப்ப வற்றப்ப ஸ்மைல் பன்னுதாம். எப்படியும் பிக்கப் ஆயிடுமாம். என்ன கொடுமை ரூபஸ் இது.