திருமண சந்தை

திருமண சந்தை

திவ்யா அக்கா ரெண்டு பதிவு போட்டிருக்காங்க பொண்ணு பாக்க போகலாம் வாங்க பாகம்1, பாகம்2,ன்னு நல்ல காமெடியான பதிவு.

“திருமணம் தேவையா இல்லையா” அப்படிங்கிறதே ஒரு பெரிய வாதத்திற்கான தலைப்பு. இதை பத்தி ஏற்கனவே திருமணம் ஓர் அலசல்னு ஒரு பதிவு போட்டாச்சு.

இந்த பதிவு திருமணம் தேவை அதுவும் அப்பா அம்மா பாத்து வைக்கிற பொண்ணு / பையன் தான் கல்யாணம் பன்னுவேன்.

சைட் அடிக்கிறது கடலை போடறது எல்லாம் டைம் பாஸ்-க்கு கடைசில அண்ணா அண்ணான்னு அல்வா குடுத்திடுவோம் / உன்னைய பாத்தா செத்து போன எங்க ஆயா மாதிரியே இருந்திச்சுமா அதனாலதான் இவ்வளவு நாளா பேசி பழகிகிட்டிருந்தேன் அப்படின்னு கழட்டி விட்டுடுவோம் என்கிற கொள்கை பிடிப்பு உள்ளவர்களுக்காக.

இப்பல்லாம் ரொம்ப ஈஸியா போயிடிச்சு ஏகப்பட்ட மேட்ரிமோனி வலைதளங்கள், பேப்பர் ஆட், ஜாதக பரிவர்தனை நிலையங்கள் அது இதுன்னு இருந்தாலும் பலருக்கு வரன் கிடைப்பதுக்கு ரொம்ப நாள் ஆகுது ஏன்?



பாத்தா இந்த பெரியவங்க பன்ற காமெடிதான். எப்படியும் பேமிலிலயே ஒரு ஜோசியர் இருப்பார் இல்லைனா அவங்களுக்குன்னு ஆஸ்தான ஜோசியர் ஒருத்தர் இருப்பார். அப்பிடி தப்பி தவறி இல்லைன்னா எதாவது ஒரு ஜோசியர் அக்கம் பக்கம் மாமிகளெ ரெபர் பன்னிடுவாங்க.

அந்த ஜோசியர் கிட்ட பையனோட / பொண்ணோட ஜாதகத்தை காமிச்சி அவரும் ஒரு நாலு நட்சத்திரத்தை எழுதி குடுத்து இதெல்லாம் இந்த ஜாதகத்துக்கு நல்லா சேரும்னிடுவார்.

பேப்பர்லயோ / மேட்ரிமோனி சைட்லயோ ஒரு ஆட் குடுப்பாங்க. குடுத்தா வர்ற ஒரு ஐம்பது ரெஸ்பான்ஸ்ல நாப்பத்து அஞ்சை நட்சத்திரம் சேரலைன்னு தூக்கி அந்தாண்ட வெச்சிருவாங்க. மொதல் பில்டரேசன் இங்க ஆரம்பிக்குது. ஆனா கரெக்டா பாத்தா இதுல பாதி சேரும் அது வேற விசயம்.

மீதி இருக்க அஞ்சும் கூட உயரம் / குட்டை நொள்ளை நொட்டைன்னு தானாவே சேராது.

அப்பிடி தப்பிதவறி ஒன்னோ ரெண்டோ சேர்ந்ததுன்னா லெட்டர் எழுதுவாங்க பாருங்க என்னமோ எக்ஸாம் எழுதற மாதிரி நாலு நாளைக்கு ஒரு லெட்டரை எழுதி அதை போஸ்ட் பன்னிட்டு சரி போன் வரும்னு உக்காந்திருந்தா அதுக்கு ரெஸ்பான்ஸே இருக்காது. இந்த சைடு எப்படியோ அப்பிடித்தானே அந்த சைடும் இருக்கும்!!

சரி லெட்டர் போட்டு பத்து பதினெஞ்சு நாள் ஆச்சு நாமளே ஒரு போன் போடுவோம்னு போட்டா அடடா நீங்க லெட்டர் போட்டேளான்னு ஆச்சர்யமால்லாம் கேப்பாங்க. சரி எதுக்கும் ஜாதகம் ஒரு காப்பி அனுப்பிடுங்களேன்னு ‘கூலா’ சொல்லுவாங்க.

நம்ம ஜோசியர் இந்த ஜாதகம் சேருதுன்னு அடிச்சி சொல்லுவார், ஆனா ஆப்போசிட் பார்ட்டி ஜாதகம் பொருத்தமே இல்லையேன்னு சொல்லுவாங்க. இதெல்லாம் ரொம்ப சகஜமா நடக்கும்.


loop
If not
Go to top தான்

கடைசில பாத்தா சம்பாதிக்கிறது என்னவோ வெப் சைட்காரனும், பேப்பர்காரனும் தான்.

திரும்ப புது ஆட் புது லெட்டர் புது போன் கால். இப்படி பாத்து தப்பித் தவறி ரெண்டு சைடும் ஓகே ஆச்சுன்னா

அடுத்த கட்ட பில்டர்

பையன் / பொண்ணு கலர் கம்மியா இருக்க மாதிரி இருக்கே.
சம்பளம் வெறும் முப்பதாயிரம்தானா இதை வெச்சு இந்த காலத்துல எப்படி குடும்பம் நடத்துவாளோ!!!???

என்னது பையனோட உடன் பொறந்தவா ரெண்டு தங்கச்சியா அப்ப அவாளுக்கு கல்யாணம் பன்னியே இவன் ஓட்டாண்டி ஆயிடுவானே.

என்னது பையனோட அப்பா, அம்மா பையனோட இருக்காளா? (பின்ன என்ன ரோடுலயா விட முடியும்) நம்மாத்து பொண்ணு போய் அவாளுக்கெல்லாமா எல்லா வேலையும் செய்யனும்!?!?!?!.

அவங்க வீட்டுல அந்தம்மிணிதான் விடிய காலைல 9 மணிக்கு!! எந்திரிச்சி என்னம்மா தினைக்கும் இதே டிபன் பன்றயேன்ற லெவல்ல இருக்கும் அது வேற விசயம்.

இப்படி பல கட்ட பில்டரேசன் தாண்டி
பையனா இருந்தா உங்களுக்கு ஒரு ரெண்டு நிமிசம் பேசறதுக்கு டைம் கிடைக்கும் அப்ப பேச வேண்டிய டயலாக்தான் மேலே குடுத்த திவ்யா எழுதிய லிங்க்.

எனக்கென்னமோ நிறைய விட்டுட்ட மாதிரி ஒரு ஃபீலிங் சரி எப்படி இருந்தாலும் பின்னூட்டத்தில நீங்கதான் சொல்லிடுவீங்களே!!! இல்லைனா ஞாபகம் வற்றப்ப இன்னொரு போஸ்ட் போட்டுடலாம்!!!

டிஸ்கி : இவ்வளவு எழுதிட்டு டிஸ்கி போடலைனா என்னைய தாளிச்சிற மாட்டிங்களா எங்க வீட்டுல இன்னும் லைன் க்ளியர் ஆகலை இதெல்லாம் நடந்த நடந்துகிட்டிருக்கற விசயம்தான் ஆனா எனக்கில்லை. நான் அவன் இல்லை.