மங்களூர் பற்றி மங்களூர் சிவா

மொத பாகம் படிக்காதவங்க இங்க போய் படிச்சிட்டு வாங்க.

எந்த ஒரு விசயம் பற்றியும் குறை சொல்வது எளிது. ஆனால் அதன் பெருமைகளை சொல்வது மிகவும் சிரமம். அதனால மங்களூரின் சிறப்புகளை முதலில் பார்க்கலாம்.

Advantage Mangalore

சிறப்புன்னு சொன்னா எனக்கு என்ன என்ன சிறப்பா தோணுதோ அதை சொல்றேன்.

சிறிய ஊராக இருப்பதாலும் ட்ராபிக் இல்லாமல் இருப்பதால் அதிக பட்சமாக 5 நிமிடத்தில் ஆபீஸ்க்கு போக முடியுது. நம்ம நண்பர்கள் சாதாரணமாக சொல்லும் டயலாக் டாப் கியர் போடறதுக்குள்ள ஆபீஸ் வந்திடும். குடும்பத்திற்காக நிறைய நேரம் ஒதுக்க முடியும்.

‘Pollution’ மிக குறந்த ஊர். இன்றைக்கு பெரிய பிரச்சனையே இந்த காற்று மாசுபடுதலும் அதனால் வரும் பாதிப்புகளும்.

தண்ணீர் பஞ்சம் கடந்த ஐந்து வருடத்தில் இதுவரை கேள்விபடவில்லை. (அதுதான் வருசத்துல ஆறு மாசம் மழை பெய்யுதே)

தமிழர் கன்னடர் பிரச்சனை இல்லை. பெங்களூர் அல்லது மைசூரில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய தலைவலி எப்ப எதுக்கு ஸ்ட்ரைக் பன்னுவானுங்கன்னே தெரியாது உதைப்பானுங்கன்னும் தெரியாது.

கர்நாடகாவின் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமார் மறைந்தபோது பெங்களூரில் என்ன என்ன கலாட்டா நடந்து என்று டி.வி. நியூஸ் பாத்த எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

ஒரு வருடத்திற்கு முன் இங்கு இந்து முஸ்லிம் பிரச்சனை காரணமாக ஊரடங்கு தடை சட்டம் (curfew) போடப்பட்டது அது கூட பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கவே.

இதுக்காக இது ‘கலவர பூமி’ன்னு எல்லாம் நினைக்காதீங்க. எந்த இடத்திலும் பிரச்சனை அல்லது கலவரம் என வந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருட்டு, கொள்ளை போன்ற ஆதாயம் தேடும் சிலர் இருக்கவே இருப்பார்கள். அவர்களை அடக்குவதற்காக அப்போது curfew போடப்பட்டது. மீடியாக்கள் ஊதி பெரிது படுத்திவிட்டன. ஊரடங்கு அமலில் இருக்கும் போது வாழ்க்கை அது ஒரு தனி பதிவே போடலாம்.

ஆட்டோ கட்டணம் நம்ம ஊரை எல்லாம் compare பண்ணா சரியாக வாங்குகிறார்கள். மீதி சில்லரை கரெக்டாக குடுக்கிறார்கள். சமீப காலமாக சில ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகம் கேட்கிறார்கள் என தகவல் நம்ம ஊர் ஆளுங்க நிறைய இங்க வந்துட்டாய்ங்களோ??

சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களை ஒப்பிடும்போது வாடகை செலவு குறைந்த ஊர். இப்போது நான் இருக்கும் இரண்டு பெட் கொண்ட வீட்டு வாடகை 2500 ஆனால் இதே அளவு வீட்டிற்கு சென்னையில் குறைந்தது 5000 கொடுக்க வேண்டும்.

உடுப்பி, தர்மஸ்தலா, சுப்ரமண்யா, கொல்லூர், ஷ்ரிங்கேரி, ஹொரநாடு போன்ற உலக புகழ்வாய்ந்த கோவில்கள் போக மங்களூர் வந்தே போக முடியும். (டூரிஸம் / டூரிஸ்ட் ஆப்பரேட்டர்களுக்கு நல்ல பிஸினஸ்).


Disadvantage Mangalore

இன்றுவரை கர்னாடகத்தின் தலைநகரான பெங்களூருக்கு ட்ரெயின் கிடையாது. இதோ இப்ப வரப்போகுது இப்ப வரப்போகுதுன்னு அஞ்சு வருஷமா சொல்லிகிட்டிருக்காங்க (பஸ் மட்டுமே ஒரே வழி).

கேட்டா ‘சக்கலேஸ்பூர் காடு’ மலை பாதை இருக்கு அங்க land slip நிறைய ஆகுது அது இதுன்னு சொல்றாங்க. டெக்னாலஜி இவ்ளோ வளர்ந்த காலத்தில இது சரி என தோன்றவில்லை. (கடல்ல பாலம் கட்டறாங்க பாலைவனத்தில ‘snow park’ பன்னறாங்க உம்.. என்னத்த சொல்ல). இதனால இங்கிருந்து சென்னைக்கு போக train route கேரளால்லம் சுத்திகிட்டு போகுது பதினெட்டு மணி நேரம் ஆகுது.

இங்க ஒரு ஏர் போர்ட் இருக்கு இண்டர்நேசனல் ஏர் போர்ட்னு பேரு ஆனால் இன்னும் night landing facility இல்லை.

இங்க வந்த புதுசுல ராத்திரி ஒரு எட்டரை மணிக்கு வீட்டுக்கு போக பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டிருந்தேன் ரோடுல ஒரு ஈ, காக்கா இல்ல புது எடம் பாஷை வேற தெரியாது ஹிந்தியும் தெரியாது ஹிந்தி படிப்பது தமிழனுக்கு அழகா? அப்டினு படிக்காம விட்டாச்சு. பயந்து போயி ஆபீஸ்க்கே திரும்ப போயிட்டேன். அப்புறம் எங்க மேனேஜர் என்னைய வீட்டுல ட்ராப் பண்ணினார்.

இந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறை அப்படி ராத்திரி எட்டு எட்டரைக்கு சாப்புட்டு படுத்திருவாங்க. ஓகோ அப்ப விடிய காலைல எழுந்து வேலைவெட்டி பாப்பாங்கன்னு தப்பு கணக்கு எல்லாம் போட்டுராதீங்க.

நாமெல்லாம் ராக்கோழியா சுத்துன ஆளுங்க ம் என்ன பன்ன?. இப்ப கொஞ்சம் பரவாயில்ல ரோடுல ராத்திரி ஒரு பத்து மணி வரைக்கும் ஆள் நடமாட்டம் இருக்கு.

உங்க கிட்ட எவ்வளவுதான் காசு இருந்தாலும் நல்ல சாப்பாடு கிடைக்காது. இனிப்பான சாம்பார், இனிப்பு ரசம் எல்லாம் இனிப்பு மயம் வெல்லம் போட்டு சமைப்பாங்களாம். சரி பரவாயில்ல சாம்பார் செய்யறாங்களேன்னு நினைச்சா சாம்பார்ல பெரிய வெள்ளரிக்காய் (கன்னடத்துல செளத்தே காய்) இல்லைனா வெள்ளை பூசணிக்காய் (கன்னடத்துல கும்ப்ளே காய்) இது ரெண்டு தவிர வேற காயே போட மாட்டாங்க.

நீங்க டெய்லி வேற வேற ஹோட்டலுக்கு போனாலும் மாத்தி மாத்தி இதையேதான் போடுனானுங்க. பொரியலும் அப்படிதான் வாரத்தில மூணு நாள் கோவைக்காய் பொரியல் செய்வானுங்க.

நம்ம கெட்ட நேரம்னா நேத்து ஒரு ஹோட்டல்ல கோவைக்காய் பொரியல் சாப்பிட்டிருப்போம் இன்னைக்கு ஒரு ஹோட்டல் போனா அங்கயும் கோவைக்காய் பொரியல் போடுவானுங்க பாருங்க கண்ணுல ரத்தம் வரும்.

பத்து ரூபாய் மீல்ஸ்ல இருந்து நூறு ரூபாய் மீல்ஸ் வரைக்கும் ட்ரை பண்ணி பாத்துட்டு எடுத்த முடிவு வேணான்டா கைபுள்ள கற்றது கை மண் அளவுன்னாலும் பரவாயில்ல என்ன தெரியுமோ செஞ்சு சாப்புடுன்னு மாசம் முப்பது நாளும் மத்தியான சாப்பாடு self cooking தான். அப்டி இல்லைனா நண்பர்களின் வீடுகளில்தான் மதிய சாப்பாடு. டிபன் பொருத்தவரைக்கும் Manageable.

இதைவிட கூத்து என்னன்னா இங்க பல்மட்டா(Balmatta) அப்டின்ற இடத்துல ஒரு ஹோட்டல் இருக்கு பேரு ‘இந்திரா பவன்’ மத்தியாணம் ஒரு மணிக்கு கரெக்டா சாத்திடுவான் கேட்டா lunch hour அட சத்தியமாங்க என்ன கொடுமை சரவணா இது.

அப்புறம் ஜாலியா சுத்தி பழகினவங்களுக்கு இங்க பீச், பிக் பஜார் விட்டா போறதுக்கு வேற போக்கிடமும் கிடையாது. Ad Labsலயும் ரஜினி இல்ல கமல் படம் மட்டும்தான் போடுவான் வருசத்துக்கு எத்தினி படம் இவங்கள்து வருதுன்னு உங்க எல்லாருக்கும் சொல்லனுமா? (எல்லா DVDயும் கெடைக்குது அது வேற விசயம்). கன்னட படமும் சகிக்காது எத்தனை தமிழ் படத்தைதான் கன்னடத்துல பாக்குறது. இதை பற்றி பெங்களூரிலிருந்து வலை பதியும் நண்பர்கள் பதிவில் அதிக விவரம் கிடைக்கலாம்.

டேய் நாங்களே தெலுங்கில இருந்துதானேடா ரீமேக் பண்ணறோம்னு ரவியும் விஜயும் வந்து சத்தியம் பண்ணாலும் கேக்க மாட்டானுங்க. ‘ன்னா என்னங்னா ன்னா பரவாலிங்னா’ன்னு விஜய்கிட்ட சொன்னாலும் சொல்வானுங்க. சரி இதை பத்தி இன்னொரு பதிவுல பாக்கலாம்.

என்னடா இவன் சாப்பாடு சினிமா பத்தி மட்டும் சொல்லியிருக்கான்னு பாக்குறீங்களா? மனிதனுக்கு மிக அவசியமானது உணவு , உடை, உறைவிடம், பொழுதுபோக்கு இதுல உடையும், உறைவிடமும் பிரச்சனையில்ல மீதி ரெண்டும்தான்.

Posted in Labels: |