திருமணம் - ஓர் அலசல்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இன்னைக்கு ஒரு சூப்பர் பதிவோட வந்திருக்கேன். இந்த டாபிக் இதுக்கு முன்னயே பல ப்ளாக்களில் அலசி, துவச்சி, காயப்போட்டு இருந்தாலும் என்னைக்குமே இது ஒரு யுனிவர்சல் டாபிக், எவர் க்ரீன் மேட்டர்.


கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா,
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா?

என்று கவிஞர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதினாலும், தாலி சென்டிமெண்ட் வெச்சு ஆயிரம் படம் வந்தாலும் யாருக்காவது கல்யாணம்னு பேச்சு வந்தாலே கூட இருக்கிற பய புள்ளைக சும்மா இருக்கிறானுவளா அதான் இல்லை மாட்டிகினான்யா ‘நயா பக்ரா’, இன்னும் எப்டி எப்டியெல்லாம் ஓட்ட முடியுமோ ஓட்டறானுங்க (அட என்னை இல்லிங்கோ நான் இன்னும் மாட்டல)..

கல்யாணம் கட்டிகிட்டா மவனே நீ காலின்னு சொல்ற மெயில் எல்லாம் தேடி தேடி அனுப்பறானுங்க.

சிரிங்க சிரிங்க!! நல்லா சிரிங்க!!!
இப்பவே சிரிச்சாதான் உண்டு!!

இத்தனை அலம்பலும் பன்றவன் கல்யாணம் பண்ணவன். கேட்டா நாளைக்கு என்னய மாதிரி நீ கஷ்டப்பட கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்திலதாங்கிறனுவ. பாசக்கார பயலுவ.



சில விஷயங்கள பேசி புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம். இந்த டாபிக் அதுல ஒண்ணு. திருமணம் அவசியமா என்பது அவரவர் கண்ணட்டோத்தை பொறுத்தது தான் என்பதே என் கருத்து.

திருமணம் நாமே வகுத்துக்கொண்டே ஒரு ஆடிமைத்தனம், மனிதன் தனக்கு தானே வைத்துக்கொள்ளும் சொந்த செலவு சூன்யம் என்பது மற்றொருவரின் வாதம்.

திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப் பட்ட விஷயம். இது ப‌லருக்குத் தேவைப் படுகிறது, சிலருக்குத் தேவைப் படாது. இது அவசியம் அனாவசியம் என்று சொல்ல முடியாது.

தேவைப் பட்டால் செய்து கொள்ளுங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் ஒரு அப்துல் கலாம் போலவோ ஒரு வாஜ்பாய் போலவோ இருந்து கொள்ளலாம் தவறில்லை.

இன்னொருவரின் கருத்து
அவசியம் - கல்யாணம் ஆகாதவங்க நினைச்சுக்கறது.
அனாவசியம் - கல்யாணம் ஆனவங்க நினைக்கிறது.
திருமணம் என்பது கட்டாயம் வேணும். ஏன்னா வெறுமனே சந்தோஷமா மட்டும் இருந்தா வாழ்க்கை போரடிச்சிடும்.

மேலைத் தேசங்களில் 'ஒன்றாக கூடி வாழுதல்' எனும் முறையும் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் அந்த முறையில்தான் வசிக்கிறார்கள். எனக்கு என்னமோ இந்த முறையால் பிற்பாடு நிச்சயமாக பிரச்சினைகள் வரும் என்று தோன்றும்!!ஏதோ அப்படி இருப்பவர்களுக்கு அது ஒத்து போச்சுனா சந்தோஷம்.


இன்னொரு நண்பரின் பதில் இது. கல்யாணத்துக்கு முன்பு இது எனக்கு பயங்கரமான கேள்வியாக இருந்தது. யாரிடமும் இருந்து ஒத்துக்கொள்கிற மாதிரியான பதில் இல்லை. இப்ப யாராவது என்னிடம் கேட்டாலும் சரியான பதில் கொடுக்கமுடியாது. வேண்டுமென்றால் இப்படி சொல்வேன். "முயற்சித்து தெரிந்து கொள்". இது QUIZ நிகழ்ச்சி அல்ல,விடை தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு.

இன்னொருவரின் கருத்து, நான் ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம். அதுவும் ‘அரேஞ்ஜ்ட் மேரேஜ்’ என்றால் உதறல் அதிகமாகிறது. யார் என்றோ, எப்படி என்ன என்றோ தெரியாத ஒரு பெண்ணுடன் எப்படி திருமண வாழ்வை துவக்குவது?. நம்மளையோ எந்த பொண்ணும் லவ் பண்ணப் போவதில்லை. நம்ம வாய் அப்படிங்க! எந்த பொண்ணு வந்து பேசினாலும், அடுத்த 10 நிமிடத்தில் ஓடிப் போயிருது. :-) சரி.. உங்க கேள்விக்கு வருவோம்...ஆண் logically driven. பெண் emotionally driven. வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்க இந்த இரண்டும் அவசியம். எனவே நம்முடன் கடைசி வரை கூட வரும் நண்பர்களில் எதிர் பாலினரும் அவசியம். நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தாலும், உலகத்துக்காக கல்யாணம் என்று ஒன்று பண்னியே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் நான் நடிகர் பிரகாஷ்ராஜ் கட்சி. கல்யாணத்துக்குப் பின்னும் நல்ல நண்பர்களாகத் தொடரும் வரையில் கல்யாணம் ஒன்றும் அவிழ்க்க முடியாத விலங்கல்ல. எங்கேயோ படித்தது. "விட்டுக் கொடுத்து வாழ்வதல்ல வாழ்க்கை. புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை" அப்டினு ஒரு வழியா முடிச்சார்.

உங்களுக்கு எதாவது புரிஞ்சதா? எனக்கும் அதே நிலை தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

QUOTE
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கை கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால இப்படி நிக்கிறதுதான் வழக்கம்.

காதல் திருமணம் சிறந்ததா Arranged திருமணம் சிறந்ததா? என்பது
தற்கொலை சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா? என கேட்பதுவும் ஒன்று.

Posted in |