மங்களூர் சிறு குறிப்பு

மங்களூர் பற்றிய சிறு குறிப்பு. சிறு குறிப்பு தான் ஏனா இது நேத்ராவதி நதிக்கரையில் அமைந்த ரொம்ப சின்ன ஊர். ஊரை ஒரு சுத்து சுத்தி வந்தாலும் ஒரு 15 கிலோமீட்டர்தான் ஆகும்.

பழைய கேரளாவாக இருந்து எல்லை தகராறு பாக பிரிவினையில் கர்நாடகாவாக ஆன ஊர் இருந்த போதும் மேடு பள்ளமான ரோடுகள், பசுமையான இயற்கை கேரளாவை ஞாகபப்படுத்தும். ஊரை சுத்தி பாக்குறேன்னு 15 கிலோ மீட்டர் தாண்டி போயிடாதீங்க அப்புறம் எந்த மோனே எந்த வேணம்னு எதாவது ஒரு சேச்சி சம்சாரிக்கும். 15-20 வது கிலோ மீட்டரில் கேரளா வந்துவிடும்.

அன்னை மங்களாதேவி குடி கொண்டுள்ள இந்த ஊர் மங்களாபுரம் என அழைக்க பட்டு வந்தது மருவி மங்களூர் என்றாகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில எந்த ஊர் பேர்தான் நுழைஞ்சிருக்கு.

மங்களூரின் சிறப்பு என்னன்னு பார்த்தால் ஒண்ணும் இல்லிங்க அட நெஜமாதாங்க. ஆனா நீங்க உடுப்பி, கொல்லூர், தர்மஸ்தலா, சுப்ரமண்யா, ஹொரனாடு (ஷ்ரி அன்னபூர்னேஸ்வரி)எங்க போகனும்னாலும் மங்களூர்ல கால் வைக்காம போக முடியாது. (இது எங்க ஏரியா உள்ள வராதன்னு யாரும் சொல்லமாட்டாங்க.)

இங்க வருஷத்துல ஆறு மாசத்துக்கு மழை பெய்யுதுங்க அட நெசமாதான். ஆகா இவ்ளோ நல்ல விஷயம் இருக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டியேனு யாரும் குத்தம் சொல்ல வேணாம் நீங்க இருந்து பாத்தா தெரியும் எங்க போனாலும் கங்காரு அதோட குட்டிய தூக்கீட்டு அலையுற மாதிரி ரெயின் கோட் தூக்கீட்டு அலைய வேண்டியிருக்கு. துவைச்ச ட்ரெஸ் மாச கணக்குல காயுது.

மங்களூரில் பார்க்க வேண்டிய கோயில்கள்

1. மங்களாதேவி
2. கதிரி மஞ்சுநாதர் ஆலயம்
3. குதிரொளி கோகர்நதேஷ்வரா ஆலயம்.

மத்தபடி பீச் இருக்கு. வந்த புதுசுல ஆஹா மாப்ளை பீச்க்கு போலாம்னு ஒரு க்ரூப் கிளம்பி போனா எங்களையும் எங்க பக்கத்துல ஓடற நாயயும் சேர்த்து ஒரு 150 பேர் இருந்திருப்போம் அதுவும் ஞாயித்துகிழமை எங்கன சொல்லி அழ? நாங்கள்லாம் மெட்ராஸ்ல பீச் பாத்துட்டு பீச்னா அப்டிதான் இருக்கும்னு நம்பி வந்தவங்க. அப்புறம் பீச் பாக்குற ஆசையே போயிடிச்சு. இப்போல்லாம் ஞாயித்துகிழமை பீச்க்கு ஒரு 200 பேர் வாராங்களாம் நம்ம நண்பரின் தகவல்.
பிக் பஸார் ஆட்லாப்ஸ் தெரியுங்களா? அதுக்கென்ன அதுதான் எங்க ஊரில ஏழெட்டு இருக்கேனு மெட்ராஸ்காரங்க பெங்களூர்காரங்க சொல்றது கேக்குது. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை இந்த ஊர்ல ஒண்ணே ஒண்ணு இருக்கு அனில் அம்பானியும் காசை என்ன பண்றதுன்னு தெரியாம இங்க ஒண்ணு கட்டிபுட்டார். பீச்சுக்கு வராத மொத்த கூட்டமும் அங்கதான் ஓசில ஏசி காத்து வாங்குறாங்க. ஸோ மை ப்ரபெரண்ஸ் ஆல்ஸோ பிக் பஸார். ஓசில சைட் அடிக்குறதுக்கு ப்ரபெரண்ஸ் வேறயானு கேக்காதீங்கப்பு இங்கன எம்.ஜி. ரோடு, ப்ரிகேட் ரோட் இல்லை ஒரு ஸ்பென்சர் ப்ளாசா ம்கூம்... எதுவும் இல்லை. நோ அதர் சாய்ஸ்.

அடுத்த் பாகம் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க.